
இந்துக் கல்லூரியில் அறிவியல் ஆசிரியர்களுக்கான பணியிடை பயிற்சி முகாம் நடந்தது.
இந்துக் கல்லூரி மற்றும் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் இணைந்து நடத்தும் கன்னியாகுமரி மாவட்ட அறிவியல் ஆசிரியர்களுக்கான பணி இடை பயிற்சி 20.1.2025 முதல் 24.1.2025 வரை நடந்து வருகிறது. இந்த பயிற்சி துவக்க விழாவில் கன்னியாகுமாரி மாவட்ட கல்வி அலுவலர் கிறிஸ்டல் ஜுயோலட் துவக்கவுரை ஆற்றினார். கல்லூரியின் தலைவர் டாக்டர் நாகராஜன் தலைமை உரை ஆற்றினார். கல்லூரி முதல்வர் முனைவர் பத்மநாபன் சிறப்புரை ஆற்றினார் கல்லூரியின் சுயநிதிப்பிரிவு இயக்குனர் முனைவர் சிவகாமி வாழ்த்துரை வழங்கினர். 50 அறிவியல் ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இந்த பயிற்சியினை கல்லூரியின் கணனி அறிவியல் துறை தலைவர் முனைவர் பழனிகுமார் ஒருங்கிணைப்பாளராக இருந்து செயல்படுத்தி வருகிறார்.