நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக வாக்களிப்பதின் அவசியம் குறித்து இளம் வாக்களர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான எஸ்விஇஇபி செயல்பாடு குறித்து வீர மார்த்தாண்டன் புதூர் திருநங்கைகள் குடியிருப்பு பகுதிகள் வசிக்கும் திருநங்கைகளுக்காக விளக்கி எடுத்துரைக்கப்பட்டது. நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் காளீஸ்வரி தலைமையில் நடைபெற்றது. உதவி மகளிர்திட்ட இயக்குநர், தோவாளை வட்டாட்சியர் கோலப்பன், தனி வட்டாட்சியர் சுப்பிரமணியன், துணை வட்டாட்சியர் சொர்ணபிரதாபன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். மேலும் தேர்தல் நேரத்தில் விதிமுறை மீறல்கள் நடைபெறுவதை C VIGIL app மூலம் பதிவு செய்து அனுப்ப மாணவர்களிடையே செயல் விளக்கமளிக்கப்பட்டது. இதன்மூலம் அனுப்பப்படும் தகவல்களின் ரகசியம் பாதுகாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. வாக்களிப்பதன் முக்கியத்துவம் மற்றும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது குறித்து நண்பர்கள் உறவினர்கள் பொதுமக்களிடையே எடுத்துரைக்குமாறு தெரிவிக்கப்பட்டது . சுதந்திரமான,நியாயமான மற்றும் அமைதியான தேர்தல்களின் மாண்பையும் நிலைநிறுத்துவது, அச்சமின்றி வாக்களிப்பது என வாக்காளர் உறுதிமொழியும் மேற்கொள்ளப்பட்டது.