நாகர்கோவில் மாநகரில் முதல்கட்டமாக பால்பண்ணை கல்வாரி
லூத்தரன் ஆலையம் முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலக ரவுண்டானா வரை
உள்ள சாலையில் பாதாள சாக்கடை திட்டப்பணி 28.4.2024-ம் தேதி முதல்
30 நாட்களுக்கு நடைபெற இருப்பதால், பார்வதிபுரம் சந்திப்பில் இருந்து
பால்பண்ணை, டெரிக், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வழியாக செல்லும் அனைத்து
வாகனங்களும் மாற்று பாதையாக பார்வதிபுரம், கட்டையன்விளை வெட்டூர்ணிமடம்
வழியாக செல்ல வேண்டும். மேற்படி போக்குவரத்து மாற்றத்திற்கு பொதுமக்களும்
வாகன ஓட்டுனர்களும் ஒத்துழைக்குமாறு வேண்டுகிறோம்.
காவல் ஆய்வாளர்,
போக்குவரத்து ஒழுங்கு பிரிவு,
கோட்டார், நாகர்கோவில்.