அஞ்சல் அலுவலகங்களில் கங்கை நதியின் புனித நீர் விற்பனை செய்யப்படுகிறது.
ஆடி அமாவாசையை (4-8-2024) முன்னிட்டு நாகர்கோவில் மற்றும் தக்கலை தலைமை அஞ்சல் அலுவலகங்களிலும் கோட்டார், கன்னியாகுமரி, சுசீந்திரம் ஆகிய துணை அஞ்சல் அலுவலகங்களிலும் கங்கை நதியின் புனித நீர் பாட்டிலில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு பாட்டிலின் விலை ரூபாய் முப்பது (ரூ.30) மட்டுமே. சென்ற வருடத்தில் மட்டும் விற்பனை செய்யப்பட்ட கங்கை புனித நீர் பாட்டில்கள் எண்ணிக்கை 943 ஆகும். மேலும் விவரங்களுக்கு பொதுமக்கள் தங்கள் அருகில் உள்ள அஞ்சலகத்தை அணுகவும். ஆடி அமாவாசையை முன்னிட்டு செய்யப்பட்டு உள்ள இந்த சிறப்பு சேவையை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கன்னியாகுமரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் செந்தில்குமார் தெரிவித்து உள்ளார்.