காரங்காடு வட்டார முதல்வரும், கண்டன்விளை பங்கு தந்தையுமான அருட்பணி சகாய ஜஸ்டஸ்சை இலந்தவிளை பங்கு தந்தையாக குழித்துறை மறை மாவட்ட ஆயர் மேதகு ஆல்பர்ட் அனஸ்தாஸ் நியமித்தது இருந்தார். இந்த நிலையில் பங்குத்தந்தையாக பொறுப்பேற்கும் நிகழ்வு இலந்தவிளை திருக்குடும்ப ஆலயத்தில் நடந்தது. குழித்துறை மறை மாவட்ட பொருளாளர் பேரருட்பணி ஜெயக்குமார் முன்னிலையில், அருட்பணி சகாய ஜஸ்டஸ் நம்பக உறுதிமொழியும், ரகசிய காப்பு வாக்குறுதியும் எடுத்து பங்குத்தந்தையாக பொறுப்பேற்றுக் கொண்டார். இந்த நிகழ்வில் கண்டன்விளை பங்குத்தந்தை அருட்பணி மரிய வின்சென்ட், மைலோடு பங்குத்தந்தை அருட்பணி மரிய டேவிட் ஆன்றணி, அருட்பணியாளர்கள் ரோமரிக்ததேயுஸ், மற்றும் கண்டன்விளை, இலந்தவிளை பங்குப் பேரவை நிர்வாகிகள், உறுப்பினர்கள், பங்கு இறைமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக அருட்பணி சகாய ஜஸ்டஸ்சை வாழ்த்தி அனுப்பும் விழா கண்டன்விளை தூய தெரஸ் அரங்கில் நடந்தது. கண்டன்விளை பங்குத்தந்தை மரிய வின்சென்ட் தவைமை வகித்தார். இணை பங்குத்தந்தை பிரித்வி தாமஸ், பங்குப்பேரவை நிர்வாகிகள் ஜஸ்டஸ், ஐசக், வறுவேலாள், லில்லிமலர், பங்குப் பேரவை உறுப்பினர்கள் மற்றும் கண்டன்விளை, சித்தன்தேப்பு, பண்டாரவிளை, இரணியல் பங்கு இறைமக்கள் ஆகியோர் கண்டன்விளை பங்கில் 8 ஆண்டுகள் 10 நாட்கள் பங்குத்தந்தையாக பணிபுரிந்த அருட்பணி சகாய ஜஸ்டஸ்சிற்கு நினைவு பரிசுகள், அன்பளிப்பு மற்றும் சால்வைகள் அணிவித்து வாழ்த்தி வழி அனுப்பி வைத்தனர்.