தமிழக அரசு கொண்டு வந்துள்ள எண்ணும் எழுத்து திட்டத்தை,ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை நடைமுறைப்படுத்துவதால்,
மாணவர்களின் கல்வித் தரம் பாதிப்பதோடு, ஆசிரியர்களுக்கு கூடுதலான பணிச்சுமை ஏற்படுத்துகிறது, எனவே இத்திட்டத்தினை முழுமையாக கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிக்டோ ஜாக்) சார்பில் மாநில ஒருங்கிணைப்பாளர் தியாகராஜன் தலைமையில் 500க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்ட கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.