தமிழ்நாட்டில் 12 ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று (6-5-2024) காலையில் வெளியிடப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தில் 12 ம் வகுப்பு தேர்வை மாணவர்கள் 10,149 பேரும், மாணவிகள் 11,411 பேர்கள் என மொத்தம் 21,560 பேர்கள் எழுதி இருந்தனர். அதில் மாணவர்கள் 9936 பேர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 9429 பேர்கள் தேர்ச்சி பெற்று மாவட்டத்தில் மொத்தம் 20,637 பேர்கள் தேர்ச்சி பெற்று உள்ளனர். இது 95.72 சதவீத தேர்ச்சி ஆகும். மார்த்தாண்டம் கல்வி மாவட்டத்தில் 11185 பேர்கள் தேர்வு எழுதியதில் 10701 பேர்கள் தேர்ச்சி பெற்று உள்ளனர். நாகர்கோவில் கல்வி மாவட்டத்தில் 10375 பேர்கள் தேர்வு எழுதியதில் 9936 பேர்கள் தேர்ச்சி பெற்று உள்ளனர்.