முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழாவினை சிறப்பாக கொண்டாடுவது
குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தப்பட்டதின் பேரில்
ஒவ்வொரு மாவட்டத்திலும்
கலைஞர் நூற்றாண்டு கலைவிழா,
கலைஞர் நூற்றாண்டு நலத்திட்ட விழா,
கலைஞர் நூற்றாண்டு பரிசளிப்பு விழா
ஆகிய மூன்று நிகழ்ச்சிகள் வீதம் செப்டம்பர் மாதம் 2023 முதல் பிப்ரவரி மாதம் 2024 வரை நடத்த
அறிவுறுத்தப்பட்டது.
கலைஞர் நூற்றாணடு கலைவிழா மாவட்ட அளவிலான பள்ளிகள் மற்றும் கல்லூரிகள்
அளவிலான விளையாட்டுக்கு, 50 பள்ளிகள் வீதம் ரூ.3000 என ரூ.1,50,000 யும், 10
கல்லூரிகள் வீதம் ரூ.5000 என
ரூ.50,000 யும், இளைஞர் விழிப்புணர்வு
நிகழ்ச்சிகள் 10 வீதம் ரூ.10000 என ரூ.1,00,000 யும் ஒதுக்கீடு செய்யப்பட்டு
மாணவ, மாணவிகளிடையே போட்டிகள் நடத்தி வெற்றப் பெற்றவர்கள் பரிசுகள்
வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
கலைஞர் நூற்றாண்டு பரிசளிப்பு விழா மாவட்ட அளவிலான பள்ளிகள் மற்றும்
கல்லூரிகள் அளவிலான பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, வினாடிவினா,
ஓவியப்போட்டி ஆகியவை மாணவ மாணவிகள் இடையே நான்கு போட்டிகளில்
ஒவ்வொரு போட்டிக்கும் 50 பள்ளிகள் வீதம் ரூ.2000 என ரூ.4,00,000 யும், மாவட்ட
அளவில் பள்ளிகளுக்கான பரிசளிப்பு விழா நான்கு போட்டிகளில் மாவட்ட அளவில்
தேர்வு செய்யப்படும் மாணக்கர்களுக்கு ரூ.10,000 வீதம் ரூ.40,000 யும், 10
கல்லூரிகள் வீதம் ரூ.2000
ரூ.60,000 யும், மாவட்ட அளவில்
கல்லூரிகளுக்கான பரிசளிப்பு விழா நான்கு போட்டிகளில் மாவட்ட அளவில் தேர்வு
செய்யப்படும் மாணக்கர்களுக்கு ரூ.10,000 வீதம் ரூ.40,000 யும், மாவட்ட அளவில்
இளைஞர்களுக்கான பரிசளிப்பு விழாவில் கபடி, கால்பந்து, கைப்பந்து நடத்தி வெற்றி மாணவர்களுக்கு
ரூ.2,40,000 யும் ஒதுக்கீடு செய்யப்பட்டு மாணவ,
மாணவிகளிடையே போட்டிகள் நடத்தி வெற்றிப் பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அதன்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா தக்கலை அரசு மேல்நிலைப் பள்ளியில் வைத்து மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் தலைமையில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் முன்னிலையில் தமிழ்நாடு பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் வழங்கினார். விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் பாலசுப்பிரமணியம் வரவேற்றார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பால தண்டாயுதபாணி பேசினார். நாகர்கோவில் மாநகராட்சி துணை மேயர் மேரி பிரின்சி லதா, பத்மநாபபுரம் நகராட்சி சேர்மன் அருள் சோபன் உட்பட அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிகளை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலர் ஜாண் ஜெகத் பிரைட் தொகுத்து வழங்கினார். பத்மநாபபுரம் வருவாய் கோட்டாட்சியர் தமிழரசி நன்றி கூறினார்.