63 வது மாநில அளவிலான காவலருக்கான தடகள போட்டிகள் கடந்த சில தினங்களாக கோவையில் வைத்து நடந்தது . இதில் கன்னியாகுமரி மாவட்டத்தில் பணியாற்றும் காவலர்கள் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், தடை தாவல் ஓட்டம், கோ கோ ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்று பதக்கங்களை வென்றனர்.
இதில் மண்டைக்காடு காவல் நிலைய பெண் தலைமைக்காவலர் கிருஷ்ணரேகா என்பவர் 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில்
தங்கப்பதக்கமும், உயரம் தாண்டுதல் போட்டியில் வெண்கல பதக்கமும், தடை தாவல் போட்டியில் வெள்ளி பதக்கமும், ஆயுதப்படையில் பணியாற்றும் தலைமைக்காவலர் டேவிட் என்பவர் 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெண்கல பதக்கமும், லலிதா என்பவர் நீளம் தாண்டுதல் போட்டியில் வெள்ளி பதக்கமும், 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளி பதக்கமும், நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணியாற்றும் முதல் நிலை காவலர் சித்ரா என்பவர் குண்டு எறிதல் போட்டியில் வெண்கல பதக்கமும், கோட்டார் காவல் நிலையத்தில் பணியாற்றும் ஷீபா என்பவர் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெண்கல பதக்கமும், மேலும் குழு விளையாட்டு போட்டியான கோ கோ போட்டியில் ஆயுதப்படையை சார்ந்த இரண்டாம் நிலை காவலர் சதீஷ் என்பவர் வெண்கல பதக்கமும் பெற்றனர். போட்டிகளில் வெற்றி பெற்ற காவலர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் வெகுவாக பாராட்டினார்.