சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மைதானத்தில், நடைபெற்ற குடியரசு தினவிழா நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியாளர் ஆஷா அஜித் தேசியக் கொடியினை ஏற்றி வைத்து, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து, சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்ததுடன், காவல்துறையில் சிறப்பாக பணி புரிந்தமைக்காக 65 காவலர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் பதக்கம் வழங்கினார்.
இவ்விழாவில், வேளாண்மைத்துறையின் சார்பில் மாவட்ட அளிவலான பயிர் விளைச்சல் போட்டி திட்டத்தின் கீழ் ரூ.25,000 மதிப்பீட்டிலான நலத்திட்டத்திற்கான ஆணையினையும், 5 பயனாளிகளுக்கு சுழல் கலப்பை இயந்திர விநியோக திட்டத்தின் கீழ் ரூ.2,10,000 மதிப்பீட்டிலான ஆணைகளையும், தோட்டாக்கலைத்துறையின் சார்பில் 2 பயனாளிகளுக்கு பாராம்பரிய காய்கறி சாகுபடியில் சிறந்து விளங்கும் விவசாயிகள் திட்டத்தின் கீழ் ரூ.25,000 மதிப்பீட்டிலான ஆணைகளையும், மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சித்துறையின் கீழ் சிஎம்சிஹெச்ஐஎஸ் திட்டத்தின் கீழ் ரூ.38,34,000 மதிப்பீட்டிலான ஆணைகளையும், முன்னாள் படைவீரர் நலத்துறையின் மூலம் 2 பயனாளிகளுக்கு ரூ.50,000 மதிப்பீட்டிலும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 2 பயனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள் திட்டத்தின் கீழ் ரூ.18,100 மதிப்பீட்டிலும்,
மாவட்ட தொழில் மையத்தின் சார்பில் 2 பயனாளிகளுக்கு என்இஇடிஎஸ் திட்டத்தின் கீழ் ரூ.3,37,000 மதிப்பீட்டிலும், யுஒய்இஜிபி திட்டத்தின் கீழ் ரூ.1,25,000 மதிப்பீட்டிலும், கூட்டுறவுத்துறையின் சார்பில் 5 பயனாளிகளுக்கு எஸ்ஹெச்ஜி, என்ஹெச்டிஎப்சி திட்டத்தின் கீழ் ரூ.36,00,000 மதிப்பீட்டிலும் என மொத்தம் 26 பயனாளிகளுக்கு ரூ.82,24,100 மதிப்பீட்டிலான அரசின் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியாளர் ஆஷா அஜித் வழங்கினார்.
மேலும், 88 காவல்துறையைச் சார்ந்த காவலர்களுக்கும், வருவாய்த்துறை மற்றும் பல்வேறுத்துறைகளில் சிறப்பாக பணிபுரிந்த 212 அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கும் நற்சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை மாவட்ட ஆட்சியாளர் வழங்கினார்.
பின்னர், பள்ளி மாணவ, மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் சிலம்பாட்டம், யோகா மற்றும் கராத்தே உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அர்விந்த், சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் செந்தில்நாதன், மாவட்ட வருவாய் அலுவலர் மோகனச்சந்திரன் , மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது)(பொ) ஜெயமணி, வருவாய் கோட்டாட்சியர்கள் சுகிதா (சிவகங்கை), பால்துரை (தேவகோட்டை), மாவட்ட ஊராட்சி தலைவர் மணிபாஸ்கரன் மற்றும் அனைத்துத்துறை அரசு முதல்நிலை அலுவலர்கள், காவல் துறை அலுவலர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.