சிவங்கை மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு மாவட்ட ஆட்சியாளர் ஆஷா அஜித் விளக்கம்

Share others

2024 – ஆம் ஆண்டு தமிழர் திருநாளாம் தைப் பொங்கலை சிறப்பாக கொண்டாடிட தலா ஒரு கிலோ பச்சரிசி , சர்க்கரை , ஒரு முழு நீள கரும்புடன் ரூ.1000 ரொக்கப்பணம்(ரூபாய் ஆயிரம் மட்டும்) மற்றும் வேட்டி சேலை சேர்த்து பொங்கல் பரிசாக வழங்க தமிழக அரசால் ஆணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த பரிசு தொகுப்பு ஒன்றிய , மாநில அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், பொது துறை நிறுவனங்களில் பணபுரிவோர், சர்க்கரை அட்டைதார்கள், பொருளில்லா அட்டைதாரர்கள் தவிர்த்து ஏனைய குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் வழங்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் ஒன்றிய , மாநில அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், பொது துறை நிறுவனங்களில் பணிபுரிவோர், சர்க்கரை அட்டைதார்கள், பொருளில்லா அட்டைதாரர்கள்கள் தவிர்த்து ஏனைய குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன்கள் விநியோகம் தற்போது முதல் தொடங்கி 9.1.2024 வரை பரிசு தொகுப்பு வழங்கிட அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

   தலா ஒரு கிலோ பச்சரிசி , சர்க்கரை , ஒரு முழு நீள கரும்புடன் ரூ.1000 ரொக்கப்பணம் மற்றும் வேட்டி சேலை  சேர்த்து பொங்கல் பரிசுத் தொகுப்பாக  வருகிற 10.1.2024-ம் தேதி முதல் 14.1.2024 தேதி வரை  தொடர்ச்சியாக  விநியோகம்  செய்யப்படும். பொங்கல்  பரிசு  தொகுப்பு  நியாய விலைக்கடையில்  கடை  விற்பனை  முனைய இந்திரத்தில் விரல்ரேகை சரிபார்ப்பு முறையில் மட்டும்  வழங்கப்படும். பொங்கல் பரிசுத்  தொகுப்பு  வழங்கப்பட்ட விவரம்  குடும்ப அட்டைதாரர்களின்  தொலைபேசிக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும்.

குடும்ப அட்டையில் இடம்பெற்று உள்ள உறுப்பினர்களில் எவரேனும் ஒருவர் பொங்கல் பரிசுத்தொகுப்பு பெற்றுக் கொள்ளலாம். அங்கீகரிக்கப்பட்ட நபர் வாயிலாகவோ இதர நபர்கள் வாயிலாகவோ பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட மாட்டாது. குடும்ப அட்டைதாரர்கள் பச்சரிசி மற்றும் சர்க்கரை பெற துணிப்பை கட்டாயம் கொண்டு வர வேண்டும்.

பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறுவதில் ஏதேனும் புகார்கள் இருப்பின் மாவட்ட கட்டுப்பாட்டுறை அறை 1077 என்கிற தொலைபேசி எண்ணிற்கோ அல்லது சிவகங்கை-
9445000347, காரைக்குடி-
9445000351, காளையார்கோவில்-9445796453, திருப்புவனம்- 9445796452, மானாமதுரை- 9445000348, இளையான்குடி- 9445000349, திருப்பத்தூர்-
9445000352, தேவகோட்டை- 9445000350, சிங்கம்புணரி-
9499937031 என்ற தொலைபேசிக்கு எண்களிலோ தொடர்பு கொள்ளலாம்.

    எனவே தகுதி உள்ள குடும்ப அட்டைதாரர்கள் டோக்கனில் குறிப்பிடப்பட்டு உள்ள நாள் மற்றும் நேரத்தில்  சம்பந்தப்பட்ட நியாய விலைக்கடைகளுக்கு சென்று பொங்கல் பரிசுத் தொகுப்பை பெற்றுக் பயன்பெறலாம் என மாவட்ட  ஆட்சியாளர்                                                       ஆஷா அஜித்  தெரிவித்துள்ளார்.

Share others

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *