கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் கன்னியாகுமரி மாவட்டத்தின் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைத்தினால் செயல்படுத்தப்பட்டு வரும் நான்கு வழிச்சாலை பணிகளை துரிதபடுத்துவதற்காக ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா, தலைமையில், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் ஆலோசகர் லீனா நாயர் (ஒய்வு) முன்னிலையில் ஆய்வு கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பாலசுப்பிரமணியம், பத்மநாபபுரம் சார் ஆட்சியர் வினய்குமார் மீனா, திட்ட இயக்குநர், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம், கூடுதல் காவல் கண்கானிப்பாளர், உதவி காவல் கண்கானிப்பாளர், உதவி காவல் துணை கண்கானிப்பாளர், கன்னியாகுமரி உதவி காவல் துணை கண்கானிப்பாளர் , வட்டாட்சியர்கள் விளவங்கோடு, கல்குளம், தோவாளை, தனி வட்டாட்சியர் நிலம் எடுப்பு, துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.