பட்டாசு சில்லறை விற்பனை கடைகளுக்கு விண்ணப்பிக்கலாம்

Share others

2023-ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டத்தில் தற்காலிகமாக பட்டாசு சில்லறை விற்பனை கடைகள் அமைக்க, வெடிபொருள் சட்டமும் விதிகளும்(2008)-ன்கீழ், உரிய ஆவணங்களுடன் 25.10.2023-க்குள் மாவட்டத்தில் இயங்கி வரும் இ-சேவை மையம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

மேலும், திட்ட வரைபடம், பத்திர ஆவணங்கள், ரூ.500-ஐ வங்கியில் செலுத்தப்பட்ட அசல் செலான், முகவரி (பான்கார்டு, ஆதார் அடையாள அட்டை, குடும்ப அட்டை/ஸ்மார்ட் அட்டை), நகராட்சி/ பேரூராட்சி / ஊராட்சி வரி ரசீது, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகிய ஆவணங்களுடன் தற்காலிக பட்டாசு சில்லறை விற்பனை உரிமம் பெற விண்ணப்பித்தல் வேண்டும்.

 அவ்வாறு பெறப்படும் தகுதியுடைய விண்ணப்பங்கள் மீது,  5.11.2023-க்குள் உரிய ஆணைகள் பிறப்பிக்கப்படும் என மாவட்ட ஆட்சியாளர்  ஆஷா அஜித், தெரிவித்துள்ளார்.

Share others

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *