பேயன்குழி அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோயில் 146 வது பஜனை பட்டாபிஷேக திருவிழா கோலாகலமாக துவங்கியது. விழாவில் முதல் நாள் இரவில் பேயன்குழி அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோயில் திருவிளக்கு வழிபாட்டு மன்றம் மற்றும் விவேகானந்தா கேந்திரம் இணைந்து நடத்திய 55 வது 1008 திருவிளக்கு வழிபாடு நடந்தது. தொடர்ந்து ஆன்மீக பேருரையும், திருவிளக்கு பூஜை ஒழுங்கு பரிசு வழங்குதலும் நடந்தது. விழா தொடர்ந்து 2025 ஜனவரி மாதம் 3 ம் தேதி வரை நடக்கிறது. 3 ம் தேதி மாலை 4 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகம் செய்ய சந்தனம், பால், பன்னீர், தேன், களபம் குடங்களில் பேயன்குழி பிள்ளையார் கோயிலில் இருந்து அம்மன் சன்னதி வரை யானை பவனி வருதல் நடக்கிறது.