அகில இந்திய ஓடும் தொழிலாளர் கழகம் நாகர்கோவில் கிளையின் இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பொதுக்குழு கூட்டம் செப்டம்பர் 20 ம் தேதி, வெள்ளிக்கிழமை, காலை 10 மணிக்கு, தோழர் வி.வி.சுரேஸ்குமார் நகர்,
இந்து வாணியர் சமுதாய அரங்கம், கோட்டாரில் வைத்து நடக்கிறது.
நிகழ்வை, அகில இந்திய ஓடும் தொழிலாளர் கழகம்,தெற்கு மண்டலத்தின் ஏஜிஎஸ், தோழர். ஆர். நாகராஜன் துவக்கி வைக்க இருக்கின்றார்.
இதனை தொடர்ந்து, தலைமை விருந்தினராக பிஎஸ்என்எல் எம்பிளாயிஸ் யூனியன் தமிழ்நாடு வட்டத்தின் செயலாளர் தோழர் ராஜூ சிறப்புரை ஆற்ற உள்ளார்.
மேலும், அகில இந்திய ஓடும் கழகத்தின் முக்கிய தலைவர்கள் பலரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பிக்க உள்ளனர்.
செப்டம்பர் 20-ம் தேதி நடக்க உள்ள நாகர்கோவில் கிளை பொதுக்குழு கூட்டத்தில் கழகத்தின் வருங்கால செயல் பாடுகளுக்கு புத்துணர்சி ஊட்டவும், நமது கிளையின் வளர்ச்சிக்காகவும் புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுக்கவும் உள்ளோம். எனவே , இந்த ஜெனரல் பாடி மீட்டிங் வெற்றி பெற, உங்களின் முழு பங்களிப்பை தர வேண்டும் என்று நாகர்கோவில் கிளைக் குழு சார்பில் கிளை தலைவர் காந்தி தெரிவித்தார்.