கல்லூரி சேர்க்கைக்கு தயாராகும் மாணவர்களுக்காக அஞ்சல் அலுவலகங்களில் சிறப்பு ஆதார் சேவைகள்.
கல்லூரி சேர்க்கையின் போது மாணவர்களின் ஆதார் புதுப்பிக்கப்பட்ட நிலையில் உள்ளதா என சரிபார்க்கப்படுகிறது. ஆதாரில் இருக்கும் கைரேகை மற்றும் கருவிழி தகவல்களை மாணவர்கள் புதுப்பித்துக் கொள்ள வலியுறுத்தப்படுகிறது. உயர் கல்வி சேர்க்கையின் போது தேவையற்ற கால தாமதத்தைத் தவிர்க்கவும் பள்ளி மாணவர்களின் வசதிக்காகவும் நாகர்கோவில் மற்றும் தக்கலை தலைமை அஞ்சலகத்தில் ஆதார் பதிவு மற்றும் திருத்த சேவை மையத்தின் செயல்பாட்டு நேரம் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை என மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. பெருகி வரும் ஆதார் சேவையின் தேவையினைக் கருத்தில் கொண்டு பின்வரும் அனைத்து அஞ்சல் அலுவலகங்களிலும் காலை 9 மணி முதல் 4 மணி வரை ஆதார் பதிவு மற்றும் திருத்த சேவைகள் வழங்கப்படும்.
கோட்டார்
நாகர்கோவில் கலெக்டரேட்
ஆரல்வாய்மொழி
நெய்யூர்
நாகர்கோவில் தொழிற்பேட்டை
அழகப்பபுரம்
மார்த்தாண்டம்
வடிவீஸ்வரம்
அழகியபாண்டிபுரம்
குழித்துறை
அருமனை
பூதப்பாண்டி
குளச்சல்
கொல்லங்கோடு
ஈத்தாமொழி
கன்னியாகுமரி
மேக்காமண்டபம்
கொட்டாரம்
சுசீந்திரம்
முளகுமூடு
மணவாளக்குறிச்சி
வெட்டூர்ணிமடம்
புதுக்கடை
திக்கணங்கோடு
களியக்காவிளை
ஆசாரிபள்ளம்
இடைக்கோடு
கருங்கல்
பாலப்பள்ளம்
காப்புகாடு
குலசேகரம்
புத்தளம்
காட்டாத்துறை
திருவட்டார்
பள்ளியாடி
பழுகல்
எஸ் டி மங்காடு
உங்கள் பகுதிகளில் சிறப்பு ஆதார் முகாம்கள் நடத்த இந்த எண்ணை தொடர்பு கொள்ளவும் – 9894774410. இந்த சிறப்பு ஏற்பாட்டை பொதுமக்கள் பயன்படுத்தி பயன்பெறுமாறு கன்னியாகுமரி கோட்டத்தின் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் செந்தில் குமார் தெரிவித்து உள்ளார்.