நாகர்கோவில் தலைமை அஞ்சலகத்தில் செயல்பட்டு வரும் ஆதார் பதிவு மற்றும் திருத்த சேவைகள் 22/9/2023 ஆம் தேதி முதல் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்பட உள்ளது. பொதுமக்களின் ஆதார் சேவையின் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கத்தில் நாகர்கோவில் தலைமை அஞ்சலகத்தில் செயல்பட்டு வரும் ஆதார் பதிவு மற்றும் திருத்த சேவை மையத்தின் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. செப்டம்பர் மாதம் 22ஆம் தேதி முதல் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை ஆதார் பதிவு மற்றும் திருத்த சேவை மையம் செயல்பட உள்ளது. இந்த நேர மாற்றம் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கும், பணிக்கு செல்பவர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனவே பொதுமக்கள் இந்த சேவையை பயன்படுத்தி பயன்பெறுமாறு கன்னியாகுமரி கோட்டத்தின் அஞ்சலக கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.