இந்திய அஞ்சல் துறை சார்பாக கன்னியாகுமரி மாவட்ட அளவிலான மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் 13/9/2023 அன்று காலை 11 மணி அளவில் அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் அலுவலகம் தலைமை அஞ்சலக கட்டிடம் இரண்டாவது மாடி நாகர்கோவிலில் வைத்து நடைபெற உள்ளது. அஞ்சல் துறை சேவையில் ஏதேனும் குறைகள் இருப்பின் பொதுமக்கள் அதனை இக்கூட்டத்தில் நேரில் வந்து தெரிவிக்கலாம் அல்லது தங்கள் குறைகளை தபால் மூலமாக அனைத்து விவரங்கள் மற்றும் ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பலாம். தபால் உரையின் மீது முன் பக்க மேல் பகுதியில் தபால் சேவை குறை தீர்க்கும் முகாம் செப்டம்பர் 2023 என்று தெளிவாக குறிப்பிட்டு இருக்க வேண்டும் புகார் மனுக்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 11.9.2023 என்று அஞ்சலக கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.