அனைத்து அரசு போக்குவரத்து கழக அலுவலர்கள் கூட்டமைப்பு கூட்டம்

Share others

சென்னை இன்ஸ்டியூட் ஆப் இன்ஜினியர்ஸ் வளாகத்தில் அனைத்து அரசு போக்குவரத்து கழக அலுவலர்கள் கூட்டமைப்பு சார்பாக நடந்த கூட்டத்தில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கலந்து கொண்டு சிறப்பித்தார். இந்த கூட்டத்தில் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் செல்வகுமார் கோரிக்கை விளக்க உரையாற்றினார். அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் மோகன், போக்குவரத்து துறை தலைவர் அலுவலக தனி அலுவலர் செல்வன், மாநகர் போக்குவரத்து கழக இணை மேலாண் இயக்குநர் நடராஜன், அரசு விரைவு போக்குவரத்து கழக பொது மேலாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் ரவி, பொருளாளர் சுரேஷ், இணை செயலாளர்கள், அமைப்பு செயலாளர் ஜெரோலின் லிஸ்பன் சிங், துணைத் தலைவர் முத்து குமாரசுவாமி மற்றும் கூட்டமைப்பு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில்
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் தற்போது
20446 பேருந்துகள் மற்றும் 313 பணிமனைகள் மூலமாக பொது
மக்கள் பயன்பாட்டிற்காக இயக்கப்பட்டு வருகிறது. பொது மக்கள்,
ஓட்டுநர், நடத்துனர், தொழில்நுட்ப பணியாளர்கள்,
மேற்பார்வையாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோருக்கும்
அரசுக்கும் இணைப்பு பாலமாக அலுவலர்கள் இரவு பகல் பாராமல்
தொடர்ந்து கண்காணித்து செயல்பட்டு வரும் 344 உதவி
மேலாளர்கள், 129 துணை மேலாளர்கள் மற்றும் 19 மேலாளர்கள்
என அனைத்து அலுவலர்களையும் உள்ளடக்கிய கூட்டமைப்பின்
உறுப்பினர்களை கொண்டு திறம்பட செயல்பட்டு வருகிறது.
தொடர்ந்து திறம்பட செயல்பட்டு வருவதுடன் அவ்வப்போது
இரவு பகல் பாராது ஆய்வுகள் செய்து வருவதன் காரணமாக
இந்தியாவில் உள்ள அரசு மற்றும் அரசு சார்ந்த 87 போக்குவரத்துக்
கழகங்களில் தொழில்நுட்ப
செயல்பாடுகளில் பல
தேசிய
விருதுகள் பெறப்பட்டுள்ளதுடன் அனைத்து அரசு போக்குவரத்து
கழகங்களிலும் மிக குறைந்த மாறுபடும் செயல்திறன் செலவினங்கள் வர காரணமாக இருக்கவும் பேருந்துகள்
தரமான பராமரிப்பு மற்றும் தோற்றப்பொலிவினை மேம்படுத்துவது
காரணமாக பொதுமக்கள்
மத்தியில்
போக்குவரத்துக்
கழகங்களுக்கு நற்பெயர் வரவும் காரணமாக உள்ளது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டது.


Share others

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *