அப்பட்டுவிளை புனித அந்தோணியார் ஆலய பங்கு குடும்ப விழா மே மாதம் 24 ஆம் தேதி துவங்கி ஜூன் மாதம் 2ஆம் தேதி வரை நடக்கிறது. விழாவின் முதல் நாள் மாலை 4 மணிக்கு கொடி மந்திரித்தல் 5 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை, 6 மணிக்கு ஆயர் வரவேற்பு, திருக்கொடியேற்றம், திருப்பலி குழித்துறைமறை மாவட்ட மேதகு ஆயர் ஆல்பர்ட் அனஸ்தாஸ் ஜெபிக்க, சிந்திக்க நடந்தது. அருட்பணியாளர்கள் இரபேல், கில்பர்ட் லிங்சன், சுரேஷ் பாபு, ஸ்டீபன் ஆகியோர் இணைந்து செபித்தனர். இரவில் பொதுக்கூட்டம், கலைக் களஞ்சியம் பல்சுவை நிகழ்ச்சி நடந்தது. 2 ம் நாள் விழாவில் மாலை 6 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை, திருப்பலி மண்ணின் மைந்தர் அருட்பணி இரபேல் ஜெபிக்க தும்புச் சின்னாம்பட்டி இணை பங்குத்தந்தை அருட்பணி அம்புரோஸ் சிந்திக்க நடக்கிறது. இரவு 9 மணிக்கு பொதுக்கூட்டம் இசை நிகழ்ச்சி நடக்கிறது. 3 ம் நாள் விழாவில் காலை 6.30 மணிக்கு திருப்பலி அருட்பணி அம்புரோஸ் ஜெபிக்க சிந்திக்க நடக்கிறது. முழு நாள் ஆராதனை நடக்கிறது. 10 மணிக்கு ஆங்கில திருப்பலி திருச்சி டிசிஎம் எஸ்எஸ்எஸ் இயக்குனர் அருட்பணி ஜோசப் இரவீந்திரன் செபிக்க சிந்திக்க நடக்கிறது. மாலை 6 மணிக்கு ஜெபமாலை , புகழ்மாலை, திருப்பலி குழித்துறை மறை மாவட்ட செயலாளர் பேரருட்பணி அந்தோணி முத்து ஜெபிக்க, குலசேகரம் பங்குத்தந்தை அருட்பணி பிறிம்மஸ் சிங் சிந்திக்க நடக்கிறது. இரவு 9 மணிக்கு பொதுக்கூட்டம் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. 4 ம் நாள் விழாவில் மாலை 6 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை, திருப்பலி குழித்துறை மறைமாவட்ட பொருளர் அருட்பணி ஜெயக்குமார் செபிக்க, பள்ளியாடி பங்குத்தந்தை அருட்பணி ஜெஸ்டின் ஜெரால்டு சிந்திக்க நடக்கிறது. இரவு 9 மணிக்கு பொதுக்கூட்டம், கலைநிகழ்ச்சிகள், நடன விருந்து நடக்கிறது. 5 ம் நாள் விழாவில் மாலை 6 மணிக்கு செபமாலை, புகழ்மாலை, திருப்பலி மாடத்தட்டுவிளை பங்குத்தந்தை அருட்பணி மரிய இராஜேந்திரன் செபிக்க மணலிக்கரை பங்குத்தந்தை அருட்பணி அலோசியஸ் பாபு சிந்திக்க நடக்கிறது. இரவு 9 மணிக்கு பொதுக்கூட்டம், கலைநிகழ்ச்சிகள், முயற்சியும் மலர்ச்சியும் நடக்கிறது. 6 ம் நாள் விழாவில் மாலை 6 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை,திருப்பலி கந்தர்வக்கோட்டை தியான இல்லம் அருட்பணி சேவியர் தாஸ் செபிக்க, திருத்துவபுரம் வட்டார முதல்வர் பேரருட்பணி ஒய்ஸ்லின் சேவியர் சிந்திக்க நடக்கிறது. இரவு 9 மணிக்கு பொதுக்கூட்டம் கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது. 7 ம் நாள் விழாவில் மாலை 6 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை, திருப்பலி களிமார் பங்குத்தந்தை அருட்பணி ஜாண் அகஸ்டஸ் செபிக்க, மணலிக்கரை கார்மெல் மேல்நிலைப் பள்ளி தாளாளர் அருட்பணி சுரேஷ் பாபு சிந்திக்க நடக்கிறது. இரவு 8.30 மணிக்கு அன்பின் விருந்து நடக்கிறது. 8 ம் நாள் விழாவில் மாலை 6 மணிக்கு ஜெபமாலை புகழ்மாலை திருப்பலி தும்புச்சின்னாம்பட்டி இணைப்பணியாளர் அருட்பணி தேவராஜ் செபிக்க குறுக்குச்சாலை கார்மெல் மழலையர் பள்ளி தாளாளர் அருட்பணி வின்சென்ட் சுகுமார் சிந்திக்க நடக்கிறது. இரவு 9 மணிக்கு பொதுக்கூட்டம் சிறப்பு கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது. 9 ம் நாள் விழாவில் காலை 8 மணிக்கு செபமாலை, புகழ்மாலை, முதல் திருவிருந்து திருப்பலி குழித்துறை மறைமாவட்ட முதன்மை பணியாளர் பேரருட்பணி சேவியர் பெனடிக்ட் செபிக்க, முளகுமூடு வட்டார முதல்வர் பேரருட்பணி டேவிட் மைக்கிள் சிந்திக்க நடக்கிறது. முதல் திருவிருந்து பெறும் சிறார்கள் சிறப்பிக்கின்றனர். மாலை 6 மணிக்கு செபமாலை, புகழ்மாலை, மாலை ஆராதனை மாத்திரவிளை இணை பங்குத்தந்தை அருட்பணி அனிஷ் செபிக்க சிந்திக்க நடக்கிறது. இரவு 9 மணிக்கு தேர்பவனி நடக்கிறது. பங்கு இறைமக்கள் சிறப்பிக்கின்றனர். 10 ம் நாள் விழாவான ஜூன் மாதம் 2 ம் தேதி காலை 8.30 மணிக்கு செபமாலை, புகழ்மாலை, ஆடம்பர கூட்டுத் திருவிழா திருப்பலி புலியூர்குறிச்சி திருத்தல அதிபர் பேரருட்பணி ஜேசு ரெத்தினம் செபிக்க, பெரியகாடு திருத்தல அதிபர் அருட்பணி சேம் மேத்யூ சிந்திக்க, அருட்பணியாளர்கள் இரபேல், தனிஸ்லாஸ், அந்தோணி முத்து ஆகியோர் இணைந்து செபிக்க நடக்கிறது. பங்கு இறைமக்கள் சிறப்பிக்கின்றனர். மதியம் 3 மணிக்கு தேர்பவனி நடக்கிறது. மாலை 6 மணிக்கு மறைக்கல்வி மன்ற ஆண்டுவிழா நடக்கிறது. விழாவில் முன்னதாக மே 23 ம் தேதி மாலை 5 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலையும், 5.30 மணிக்கு கல்லறை மந்திரித்தல் , 6 மணிக்கு திருப்பலி சுவாமியார்மடம் திருத்தல அதிபர் அருட்பணி இராயப்பன் செபிக்க தக்கலை கார்மெல் மழலைப் பள்ளி தாளாளர் அருட்பணி அந்தோணி முத்து சிந்திக்க நடக்கிறது. விழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை அருட்பணி இஞ்ஞாசிமுத்து, அருட்சகோதரி தெரசா, பங்கு அருட்பணி பேரவை, பங்கு இறைமக்கள், பங்கு அருட்பணி பேரவை துணைத் தலைவர் மரிய ஆன்றனி, செயலாளர் புஷ்ப லதா, துணைச் செயலாளர் லீமா றோஸ், பொருளாளர் மரிய செபஸ்தியான் ஆகியோர் இணைந்து செய்துள்ளனர்.