கன்னியாகுமரி மாவட்டம் அப்பட்டுவிளை புனித சூசையப்பர் ஆலய திருவிழா ஏப்ரல் மாதம் 25 ம் தேதி முதல் மே மாதம் 4 ம் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. விழாவின் முதல் நாள் காலை 6 மணிக்கு கல்லறை தோட்டத்தில் முன்னோர் நினைவு திருப்பலியும், 8 மணிக்கு திருக்கொடி காணிக்கை நேர்ச்சை வைத்தலும் நடக்கிறது. மாலை 5.30 மணிக்கு ஜெபமாலை, நவநாள், 6:30 மணிக்கு திருக்கொடியேற்றம், திருப்பலி தொலையாவட்டம் அன்னை வேளாங்கண்ணி கல்லூரி அருட்பணி ஜேசு மரியான் தலைமையில் முன்னாள் பங்குத்தந்தை அருட்பணி மைக்கேல் அலோசியஸ் மறையுரையோடு நடக்கிறது. விழா நாட்களில் மாலையில் செபமாலை, நவநாள், திருப்பலி நடக்கிறது. 8 ம் நாள் விழாவான மே மாதம் 2 ம் தேதி காலை 7 மணிக்கு திருமுழுக்கு திருப்பலி திண்டிவனம் அருட்பணி ரபேல் தலைமையில் நடக்கிறது. இரவு 8.30 மணிக்கு அன்பின் விருந்து நடக்கிறது. 9 ம் நாள் விழாவில் காலை 9 மணிக்கு முதல் திருவிருந்து திருப்பலி முஞ்சிறை அருட்பணி ஜெயபிரகாஷ் தலைமையில் நடக்கிறது. மாலை 5.30 மணிக்கு ஜெபமாலை, நவநாள், 6.30 மணிக்கு சிறப்பு மாலை ஆராதனையும், இரவு 8.30 மணிக்கு தேர்பவனியும் நடக்கிறது. 10 ம் நாள் விழாவான மே 4 ம் தேதி காலை 6 மணிக்கு முதல் திருப்பலியும், 9 மணிக்கு ஆடம்பர கூட்டுத் திருப்பலி கண்டன்விளை அருட்பணி மரிய வின்சென்ட் தலைமையில் நடக்கிறது. மாலை 4 மணிக்கு தேர்பவனியும், 5.30 மணிக்கு திருக்கொடியிறக்கம், நற்கருணை ஆசீரும், இரவு கத்தோலிக்க சங்கம் நடித்து வழங்கும் இறைவாக்கினர் எலியா என்ற வரலாற்று நாடகம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை பங்கு இறைமக்கள், பங்கு அருட்பணி பேரவை, பங்குத்தந்தை அருட்பணி சேவியர் புரூஸ், அருட் சகோதரி ஸ்டேனி, பங்கு அருட்பணி பேரவை துணைத் தலைவர் விஸ்வராஜ் , செயலாளர் பேபி ஜாய், துணை செயலாளர் ஆல்பின் ராஜேஷ், பொருளாளர் லிற்றில் பிளவர் ஆகியோர் இணைந்து செய்து வருகின்றனர்.
அப்பட்டுவிளை புனித சூசையப்பர் ஆலய திருவிழா அனைவரையும் பங்குத்தந்தை அருட்பணி சேவியர் புரூஸ் அழைக்கிறார்
