கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு அரசு ஊர்தி ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் ஆயுத பூஜை விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தலைவர் விஜயகுமார், செயலாளர் பால்ராஜ், பொருளாளர் முருகன் மற்றும் உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். விழாவை முன்னிட்டு வாகனங்களை அலங்கரித்து கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வரிசையாக நிறுத்தப்பட்டு ஒவ்வொரு வாகனத்துக்கும் பூஜை செய்யப்பட்டது.