மாடத்தட்டுவிளை அரசு ஊர்புற நூலகத்துக்கு ரூ. 22 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கன்னியாகுமரி மாவட்ட நூலக அலுவலர் மேரி தலைமை வகித்தார். வில்லுக்குறி பேரூராட்சி தலைவர் விஜயலெட்சுமி, செயல் அலுவலர் ராமு, வார்டு உறுப்பினர்கள் புனிதா, எட்வர்ட் திலக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாடத்தட்டுவிளை பங்குத்தந்தை அருட்பணி மரிய இராஜேந்திரன் செபம் செய்து அர்ச்சித்து வைத்தார். மாடத்தட்டுவிளை பங்கு அருட்பணி பேரவை துணைத் தலைவர் எட்வின் சேவியர் செல்வன், முன்னாள் துணைத் தலைவர்கள் அகஸ்டின், பயஸ் சேவியர், முன்னாள் வார்டு உறுப்பினர் ஜாண் பேட்ரிக், சமூக ஆர்வலர் பிரான்சீஸ் சேவியர், ஜோஸ் , பேசில் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அரசு நூலகம் அடிக்கல் நாட்டல்
