கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை மறை மாவட்டத்திற்கு உட்பட்ட மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலயம் வரலாற்று சிறப்பும் பாரம்பரிய மிக்க ஆலயமாக இருந்து வருகிறது. இந்த ஆலயத்தின் சிறப்புகளை பங்கு தந்தை அருட்பணி ஜெயக்குமார் அவர்களிடம் கேட்டப்போது கூறியதாவது
மக்கள் தொகை அதிகம் கொண்டு உள்ள கிராமம் என்றும் இதில் கண் தானம் செய்யும் மக்கள் அதிகப்படியாக உள்ள நிலையில், இக்கிராமம் தான கிராமம் என சிறப்பு பெயர் பெற்று உள்ளது.
மண்ணில் புதைப்பதை கண்ணில் விளைப்போம் என்னும் அடிப்படையில் கண்தானத்தில் சிறந்து விளங்குகிறது. மேலும் இவ்வூர் மக்களுக்கு தானம் செய்யும் பண்பு இயல்பாகவே அமைந்து உள்ளது என்றும் தெரிவித்தார். மேலும் ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு உதவி செய்யும் திட்டம், குழந்தை இயேசு குடில் திட்டம், கல்வி உதவி திட்டம் ஆகிய திட்டங்களின் மூலம் ஏழை எளிய மக்களுக்கு உதவி வருகின்றனர்.கல்வியின் சிறப்புகளை எடுத்துரைக்கும் வகையில் கல்வி நிறுவனங்களையும் ஆலயம் சார்பில் நடத்தி வருகின்றனர்.
இந்த மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றிருக்கும் புனித செபஸ்தியார் பஜனை பட்டாபிஷேகம் கார்த்திகை மாதம் ஒன்றாம் தேதி முதல் துவங்கும் என்றும் இறுதி ஆறு நாட்கள் பட்டாபிஷேக விழாவாக நடக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் புனித செபஸ்தியார் ஆலய திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த திருவிழா நிகழ்ச்சிகளில் தேர்பவனி, ஆராதனை பாடல்கள் பாடுவது போன்ற பல கலை நிகழ்ச்சிகளுடன் உற்றார் உறவினர் ஆகியோரோடு சிறப்பித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள் என்று பங்குத்தந்தை அருட்பணி ஜெயக்குமார் தெரிவித்தார்.
தொகுப்பு
குமரி குரல் பத்திரிக்கைகாக…
அக் ஷிதா பெல்ஜெஸ், சித்ரா