கன்னியாகுமரி மாவட்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பாக
மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் தலைமையில் மாவட்ட
ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் மாதாந்திர ஆய்வு
கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர்,
ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு
தேசிய தரச்சான்று கிடைக்கபெற்றத்தற்கு கல்லூரி முதல்வர், மருத்துவர்கள்,
செவிலியர்கள் உள்ளிட்டோருக்கு தனது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் பகிர்ந்து
கொண்டு தெரிவிக்கையில் –
என்ஏபிஹெச் என்பது இந்தியத் தர கவுன்சிலின் ஒரு குழுவாகும், இது சுகாதார
நிறுவனங்களுக்கான அங்கீகாரத் திட்டத்தை நிறுவவும் செயல்படுத்தவும்
அமைக்கப்பட்டது. 2005-ல் உருவாக்கப்பட்டது. இது இந்தியாவில் உள்ள
மருத்துவமனைகளுக்கான முதன்மை அங்கீகாரமாகும்.
மருத்துவமனைகள் மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு வழங்குநர்களுக்கான தேசிய
அங்கீகார வாரியம் என்பது இந்தியத் தரக் கவுன்சிலின் ஒரு குழுவாகும்,
இது சுகாதார நிறுவனங்களுக்கான அங்கீகாரத் திட்டத்தை நிறுவவும் செயல்படுத்தவும்
அமைக்கப்பட்டது. தொழில்துறை, நுகர்வோர், அரசாங்கம் உட்பட அனைத்து
பங்குதாரர்களால் ஆதரிக்கப்படும் வாரியம், அதன் செயல்பாட்டில் முழு செயல்பாட்டு
சுயாட்சியைக் கொண்டுள்ளது.
மேலும் ஒரு சுகாதார அமைப்புக்கான அங்கீகாரம் தொடர்ச்சியான
முன்னேற்றத்தைத் தூண்டுகிறது. இது தரமான பராமரிப்புக்கான உறுதிப்பாட்டை
வெளிப்படுத்த நிறுவனத்தை செயல்படுத்துகிறது. இது சுகாதார அமைப்பு வழங்கும்
சேவைகளில் சமூகத்தின் நம்பிக்கையை உயர்த்துகிறது. இது சுகாதாரப் பிரிவுக்கு
சிறந்ததைக் குறிக்கும் வாய்ப்பையும் வழங்குகிறது
தமிழ்நாட்டில் உள்ள மூன்று மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு இந்த
விருதுகளை பல கட்ட ஆய்வுகளுக்கு பின் வழங்கப்பட்டுள்ளது. இவ்விருது
ஆசாரிபள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் உன்னத சேவைக்கு கிடைத்த
ஒரு சான்றிதழ் என்பது போற்றுதற்குரியது. இந்த தரச்சான்றிதழ் ஆசாரிப்பள்ளம் மருத்துவ
கல்லூரி மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்
கொள்கிறேன். இவ்வாறு மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் ஆசாரிபள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை
முதல்வர் பிரின்ஸ் பயஸ், இணை இயக்குநர் (மருத்துவபணிகள்) பிரகலாதன்,
துணை இயக்குநர் (பொது சுகாதாரம்) மீனாட்சி, கண்காணிப்பாளர் அருள்பிரகாஷ்,
உறைவிட மருத்துவ அலுவலர் ஜோசப் சென், உதவி உறைவிட மருத்துவ
அலுவலர்கள் ரெனி மோள், .விஜயலெட்சுமி, ஒருங்கிணைப்பாளர்
ரியாஸ் அகமது உட்பட மருத்துவர்கள் பலர் கலந்து கொண்டனர்.