கன்னியாகுமரி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்
தொகை வழங்குவதில் பாரபட்சம்.
நான்கு வீடுகள் வாடகைக்கு கொடுத்தவர்கள், கந்துவட்டி தொழில் செய்பவர்கள் ஆகியோருக்கு பணம் கொடுக்கப்பட்டு உள்ளது ஆனால் ஏழை எளிய மக்களுக்கு உரிமை தொகை வழங்கவில்லை என கூறிய பெண்களால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழக அரசு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை மூலமாக தகுதியான பயனாளி பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை துவக்கி உள்ளது. விண்ணப்பங்கள் பல்வேறு கட்ட பரிசீலனைக்கு பின்னர் தொகைகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், ஏற்கனவே விண்ணப்பித்து உதவித்தொகை கிடைக்காதவர்கள் நேரில் வந்து தங்கள் ஆவணங்களை காட்ட அதிகாரிகள் அவகாசம் அளித்தனர் அதன்படி இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏராளமான பெண்கள் வந்து தங்களுக்கு உரிமை தொகை கிடைக்கவில்லை, கார் வைத்துள்ளவர்கள் நான்கு வீடுகளை வாடகைக்கு கொடுத்துள்ளவர்கள்
கந்துவட்டி தொழில் செய்பவர்கள்ளுக்கு எல்லாம் உரிமைத்தொகை வந்துள்ளது அதே நேரம் ஏழை எளிய பெண்களுக்கு இந்த திட்டத்தின் மூலம் உதவி தொகை வழங்கப்படவில்லை என கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முறையிட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.