ஜுன்-21ம் தேதி 10 வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி அஞ்சல் கோட்டத்தில் இந்திய அஞ்சல் துறை சார்பாக ஆயத்த யோகா நிகழ்ச்சி நாகர்கோவில் மற்றும் தக்கலை தலைமை தபால் அலுவலகங்களில் 7.6.2024 அன்று காலை 7 மணி முதல் 7.45 வரை நடந்தது.
நாகர்கோவில் தலைமை தபால் அலுவலகத்தில் நடந்த யோகா ஆயத்த நிகழ்வில் கன்னியாகுமரி மாவட்ட அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் செந்தில் குமார் உத்தரவின் பெயரில் உதவி கோட்ட கண்காணிப்பாளர் பரமேஸ்வரன், தலைமை அஞ்சலக அதிகாரி அஜிகுமார், நாகர்கோவில் கிழக்கு உப கோட்ட அஞ்சல் ஆய்வாளர் ஜாய்ஸ், நாகர்கோவில் மேற்கு உப கோட்ட அஞ்சல் ஆய்வாளர் நிதிஷ், அஞ்சல் காப்பீடு வளர்ச்சி அதிகாரி சுபாஷ், மற்றும் அஞ்சல் அலுவலகர்கள் சுமார் 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயிற்சியினை மேற்கொண்டனர்.