ஆரம்ப சுகாதார நிலையம் ஆய்வு

Share others

கன்னியாகுமரி மாவட்ட பொது சுகாதாரத்துறையின் சார்பில் விளவங்கோடு
வட்டத்திற்கு உட்பட்ட, இடைக்கோடு பகுதியில் அமைந்துள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப
சுகாதார நிலையத்தினை மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர்
நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில் –
இடைக்கோடு ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் பொது மருத்துவம், அறுவை
சிகிச்சை, குழந்தைகள் நல மகப்பேறியியல் மருத்துவம், கண் சிகிச்சை, பல் மருத்துவம், சித்த
மருத்துவம், இயன்முறை மருத்துவம், தொழு நோய் பிரிவு, காச நோய் பிரிவு, முதியோர் பிரிவு,
குடும்ப கட்டுப்பாடு, ஆரோக்கியமான இளம் பருவகால ஆலோசனை, மாரடைப்பு, பக்கவாதம்,
மகப்பேறு, தீக்காயம், நாய்க்கடி, பாம்புக்கடி, தேள்கடி, விஷம் அருந்துதல், தொடுதல்,
சுவாசித்தல், வலிப்பு நோய் போன்ற நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


மேலும் ரூ.63 லட்சம் மதிப்பில் கட்டிமுடிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்ட கூடுதல்
மருத்துவ கட்டிடத்தினை நோயாளிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வர
அறிவுறுத்தப்பட்டதோடு, உள்நோயாளிகளாக சிசிச்சை பெற்று வருபவர்களின் உறவினர்கள்
வெளியில் உட்காரும் விதமாக தற்காலிக கூடாரம் அமைத்திடவும் அறிவுறுத்தப்பட்டது.
இவ்வாறு மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர், பேசினார்.
முன்னதாக மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர்
இடைக்கோடு ஆரம்ப சுகாதார மருத்துவமனை பணியாளர் வருகை பதிவேடு, பணி பதிவேடு,
மருந்து இருப்பு பதிவேடு குறித்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டதோடு
நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார்கள்.
ஆய்வின்போது, துணை இயக்குநர் (பொது சுகாதாரம்) மீனாட்சி,
உதவி செயற்பொறியாளர், பேரூராட்சி தலைவர், உள்ளாட்சி பிரதிநிதிகள், மருத்துவர்கள்,
செவிலியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.


Share others

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *