நாகர்கோவில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இயங்கி வரும் அறிவியல் சங்கம் மாணவர்கள் இடையே அறிவியல் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக துவங்கப்பட்டது. தற்போது கன்னியாகுமரி மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தோடு இணைந்து பல செயல்பாடுகளில் பணியாற்ற புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது. அறிவியலை பிரபலப்படுத்துவதற்காக தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தோடு இணைந்து நாகர்கோவில் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் அறிவியல் சங்கமானது பொதுமக்களுக்காக பிளானட் பரெட் (இரவு வானத்தில் ஆறு கிரகங்கள் ஒரே நேரத்தில் தெரிவது) நிகழ்வினை இன்று (8 ம் தேதி) மாலை 6 மணி முதல் கல்லூரியில் இருந்து பார்ப்பதற்கு கல்லூரி முதல்வர் முனைவர் பிரகாசி அருள் ஜோதி, அறிவியல் சங்க ஒருங்கிணைப்பாளர் முனைவர் கார்மல் விஜிலா பாய் மற்றும் பேராசிரியர்கள் ஏற்பாடு செய்து உள்ளனர்.
ஆறு கிரகங்கள் ஒரே நேரத்தில்
