இயற்கை பொருட்களை கொண்டு தேர்தல் விழிப்புணர்வு

Share others

இயற்கை பொருட்கள் மற்றும் பழவகைகள் கொண்டு தயாரிக்கப்பட்ட தேர்தல் விழிப்புணர்வு கண்காட்சி – மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியாளர் அழகு மீனா துவக்கி வைத்து பார்வையிட்டார்.


கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குளச்சல் காமராஜர் பேருந்து நிலையத்தில் மகளிர் திட்டத்தின் சார்பில் இயற்கை பொருட்கள் மற்றும் பழவகைகள் கொண்டு தயாரிக்கப்பட்ட தேர்தல் விழிப்புணர்வு கண்காட்சியினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா துவக்கி வைத்து நேரில் பார்வையிட்டு பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கி தெரிவிக்கையில் –


இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, வருகின்ற சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-ல் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள அனைத்து வாக்காளர்களும் வரும் 23.4.2026 அன்று நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில், தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக கடந்த தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டத்தில் 65 சதவீதம் வாக்குகள் மட்டுமே பதிவாகி உள்ளது.

எனவே நடைபெற உள்ள தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவினை இலக்காக கொண்டு, வாக்குசதவீதம் குறைந்த சட்டமன்ற தொகுதிகளை கண்டறியப்பட்டதோடு, வாக்குச்சாவடிகளையும் கண்டறியப்பட்டு உள்ளது. எனவே வாக்குச்சதவீதம் குறைந்த பகுதிகளில் வாக்குச் சதவீதத்தினை உயர்த்தும் வகையில் அனைத்து துறைகளின் சார்பாக தினந்தோறும், பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.


அதன்ஒருபகுதியாக குளச்சல் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குளச்சல் காமராஜர் பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் மகளிர் திட்டம் சார்பில் சுயஉதவிக்குழுவினர் இணைந்து வெற்றிலை, வாழை இலை, பழம், தென்னங்கீற்று, தேங்காய் பிஞ்சு, சிப்பி, சங்கு, புளியமுத்து, மர சீனிகிழங்கு வற்றல், மாதுழை, திராட்சை, ஆரஞ்சு, தர்பூசணி உள்ளிட்ட பொருட்களை கொண்டு, 100 சதவீதம் வாக்கு தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள், படங்கள், பாதகைகள், தோரணங்கள் தயாரிக்கப்பட்டு பொதுமக்களின் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்டு,

விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும் பேருந்துநிலையத்தில் உள்ள 85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் மத்தியில் கேக், ஊட்டியதோடு, அவர்கள் தவறாமல் வரும் ஏப்ரல் 23ம் அன்று வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது. தொடர்ந்து

பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளுக்கு தேர்தல் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. இவ்வாறு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா தெரிவித்தார்.


நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மகளிர் திட்ட இயக்குநர் பத்ஹூ முகம்மது நசீர், உதவி திட்ட இயக்குநர்கள் கலைசெல்வி, வளர்மதி, மகளிர் சுய உதவி குழுவினர், துறை அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.
தேர்தல் திருவிழா தமிழ்நாட்டின் பெருவிழா.


Share others

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *