வன உயிரின வார விழாவினை முன்னிட்டு (2 -10- 2023 முதல் 8- 10 – 2023) கன்னியாகுமரி வன உயிரின சரணாலயம் சார்பில் அழகியபாண்டியபுரம் வனச்சரகம் கட்டுப்பாட்டில் உள்ள காளிகேசம் சூழல் சுற்றுலா மையத்தில் வைத்து மாவட்ட வன அலுவலர் மற்றும் வன உயிரின காப்பாளர் இளையராஜா தலைமையில் கடுக்கரை அரசு உயர்நிலைப் பள்ளியில் பயிலும் 8 மற்றும் 9 ம் வகுப்பு மாணவர்களுக்கு வனத்துறை சார்பில் இயற்கை விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் அழகிய பாண்டியபுரம் வனச்சரக அலுவலர் வித்யாதர் (பயிற்சி), வனப்பணியாளர்கள், தன்னார்வ வர்கள், கடுக்கரை அரசு உயர்நிலைப் பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் வனம் மற்றும் வன உயிரினங்களின் பாதுகாப்பு குறித்து மாணவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது. வன உயிரினங்களின் பாதுகாப்பு குறித்து, இயற்கை நடைபயணம், விளையாட்டுகள், கதைகள் மற்றும் குறும்படங்கள் மூலமும் விழிப்புணர்வு வழங்கப்பட்டது. இது புது வித அனுபவமாக இருந்தாக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தெரிவித்தனர்.