கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறி பகுதியில் மழைநீர் ஓடையில் இழுத்து சென்ற பள்ளி மாணவனுக்கு இழப்பீடு கேட்டு போராட்டம் வில்லுக்குறி குருசடி ஜங்ஷனில் நடந்த போது பாதுகாப்பு பணிக்காக வந்த இரணியல் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் வேல் குமார் கன மழையின் காரணமாக மழைநீர் வடிகால் ஓடையில் பாய்ந்தது. அப்போது மழைநீர் ஓடை பாதுகாப்பு இல்லாமல் இருந்ததை கவனித்த இன்ஸ்பெக்டர் அருகில் இருந்த கம்பி கிரில் மற்றும் கற்களை எடுத்து பொதுமக்கள் நடந்து செல்லும் போது மீண்டும் விழுந்து விடாமல் பாதுகாப்பாக எடுத்து வைத்தார். இதை பார்த்தவர்கள் இரணியல் இன்ஸ்பெக்டர் செந்தில் வேல் குமார் அவர்களின் செயலை பொதுமக்கள் பாராட்டினர்.