பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் இரு சக்கர வாகனங்களில் வீலிங் செய்யும் இளைஞர்கள் சமூக வலைதளங்கள் மூலம் கண்காணிப்பு. பெற்றோர்களுக்கும் அபராதம் விதிப்பு. மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் உத்தரவில் அதிரடி நடவடிக்கை
இளைஞர்கள் நாளுக்கு நாள் அதிக சிசி கொண்ட இருசக்கர வாகனங்களை பயன்படுத்தும் போது பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில், மேலும் தங்களுக்கே ஆபத்து ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து வீலிங் செய்வது, அபாயகரமான முறையில் வாகனம் ஓட்டுதல் போன்ற செயல்களில் ஈடுபடுவதும், அதனை சமூக வலைதளங்களில் பதிவேற்றும் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவ்வாறான செயல்களில் ஈடுபடும் நபர்களை சமூக வலைதளங்களில் மூலம் கண்காணித்து அவர்களுக்கும் அவருடைய பெற்றோர்களுக்கும் அபராதம் விதிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரன் பிரசாத் உத்தரவிட்டார். அந்த உத்தரவு படி சமூக வலைதளங்களில் இவ்வாறாக பதிவிட்ட இளைஞர்களும் அவர்களின் வாகனங்களும் அடையாளம் காணப்பட்டு,நாகர்கோயில் போக்குவரத்து ஒழுங்கு பிரிவு போலீசார், இளைஞர்களுக்கும் , அவர்களின் பெற்றோர்களுக்கும் அபராதம் விதித்தனர். இவ்வாறு தொடர்ந்து அஜாக்கிரதையாகவும் அதிவேகமாகவும், அபாயகரமாகவும் வாகனங்களை பயன்படுத்தும் நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என எச்சரித்து அனுப்பப்பட்டனர்.மேலும் இந்த நடவடிக்கை மாவட்டம் முழுவதும் தீவிரப்படுத்தப்படும்.