சாலை விதிமுறைகளை மீறி பொது மக்களுக்கு அச்சம் ஏற்படுத்தும் வகையில் இருசக்கர வாகனத்தில் சாகசங்கள் செய்து வீடியோ பதிவிட்ட இளைஞர்களை அடையாளம் கண்டறிந்து அபராதம் விதித்த குமரி மாவட்ட போலீசார்
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரன் பிரசாத் I உத்தரவின் பேரில் பொதுமக்களுக்கு அச்சம் ஏற்படுத்தும் வகையில் அபாயகரமாக இருசக்கர வாகனங்களில் சாகசங்கள் செய்து இன்ஸ்டாகிராமில் வீடியோக்கள் பதிவிட்டு வந்த இளைஞர்களை போலீசார் தேடி வந்தனர்.
இந்த நிலையில் வாகன தனிக்கையின்போது நாகர்கோவில் போக்குவரத்து ஒழுங்கு பிரிவு காவல்துறையினரால் அவர்களை அடையாளம் காணப்பட்டு வாகனங்களை பறிமுதல் செய்து ஆபத்தாக வாகனம் ஓட்டியது, தலைகவசம் இல்லாமல் வாகனம் ஓட்டியது, ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டியது ஆகிய விதிமீறல்களுக்கு தலா 12,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் ஓட்டுநர் உரிமம் இல்லாத நபர்களுக்கு இருசக்கர வாகனம் ஓட்ட அனுமதித்த இளைஞர்களின் பெற்றோரையும் வரவழைத்து பெற்றோர்களுக்கும் 5000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.