தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வேலூர் மாவட்டத்தில் நடந்த அரசு நிகழ்ச்சியில் பல்வேறு மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களை காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். அதில் ஒன்று சிவகங்கை மாவட்டம் சிவகங்கை ஊராட்சிக்கு உட்பட்ட ஒக்கூர் ஊராட்சியில் ரூ. 4.51 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் மாவட்ட ஆட்சியாளர் ஆஷா அஜித் குத்து விளக்கேற்றி வைத்து விட்டு சிறப்பித்து பயனாளிக்கு வீட்டிற்கான சாவி மற்றும் பாத்திரங்களை வழங்கினார்.