இல்லம் தேடி எப்ஐஆர் திட்டம் மூலம் 560 புகார்தாரர்களுக்கு வழங்கல்

Share others

பொதுமக்கள் மத்தியில் நம்பகத்தன்மையை அதிகரிக்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் ஸ்டாலினின் 173(2) எப்ஐஆர் உங்கள் உரிமை திட்டம்.
இல்லம்தேடி புகார்தாரர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்ட 560 எப் ஐ ஆர். கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் ஜனவரி மாதம் 26ஆம் தேதி 173(2) திட்டம் எப்ஐஆர் உங்கள் உரிமை திட்டத்தினை தொடங்கி வைத்தார்.
இந்த திட்டத்தின் மூலம் இதுவரை 560 எப்ஐஆர் புகார்தாரர்களுக்கு இலவசமாக ஊர்காவல் கண்காணிப்பு திட்ட போலீசார் மூலமும், காவல் நிலையம் மூலமாகவும் வழங்கப்பட்டு உள்ளது. புகார்தாரரின் இல்லம் தேடியே போலீசார் இலவச எப் ஐ ஆர் நகலினை வழங்கி வருவதால் போலீசார் மீதான நம்பகத் தன்மை அதிகரித்து புகார்தாரர்களின் தேவையற்ற அலைக்கழிப்புகள் தடுக்கப்பட்டு உள்ளதாக பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது.


Share others

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *