கன்னியாகுமரி மாவட்ட காவல்துறையினரின் நீண்ட நாள் கோரிக்கையான இல்லவாசிகள் சிகிச்சை பிரிவினை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் திறந்து வைத்தார். கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆசாரிபள்ளம் வளாகத்தில் இல்லவாசிகள் சிகிச்சை வார்டை திறந்து வைத்தார்.
இல்லவாசிகள் சிகிச்சை வார்டு என்பது காவலர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்தது. சிறைவாசிகளை பாதுகாப்பான முறையில் சிகிச்சை அளிப்பதற்காக இது திறக்கப்பட்டு உள்ளது .
இந்த வார்டில் ஒரே நேரத்தில் ஒன்பது பேர் சிகிச்சை பெரும் வகையில் படுக்கை வசதி கழிவறை ஆகியவை உள்ளது. காப்பிருக்கும் காவலர்களுக்கு தனி அறை செவிலியர்களுக்கு தனி அறை உள்ளது. மேலும் இந்த வார்டில் சிசிடிவி கேமராக்கள் பொறுத்தப்பட்டு இந்த வார்டு கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது. இந்த திறப்பு விழாவில் டாக்டர் ராமலட்சுமி முதல்வர் கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆசாரிப்பள்ளம், லலித் குமார் உதவி காவல் கண்காணிப்பாளர் நாகர்கோவில் உட்கோட்டம் பொறுப்பு ஆயுதப்படை கன்னியாகுமரி மாவட்டம், டாக்டர் கிங்ஸ்லி ஜெபசிங் மருத்துவமனை கண்காணிப்பாளர், டாக்டர் ஜோசப்சென் உறைவிட மருத்துவ அலுவலர், டாக்டர் விஜயலட்சுமி உதவி உறைவிட மருத்துவ அலுவலர், டாக்டர் ரெனிமோள் உதவி உறைவிட மருத்துவ அலுவலர் , சுஜாதா காவல் ஆய்வாளர் ஆயுதப்படை கன்னியாகுமரி மாவட்டம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கன்னியாகுமரி மாவட்ட காவலர்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிய மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு அனைத்து காவலர்களும் நன்றியை தெரிவித்தனர்.
இல்லவாசிகள் சிகிச்சை பிரிவு திறப்பு
