
கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரி சார்பில் உலக உடல் பருமன் எதிர்ப்பு
விழிப்புணர்வு ஊர்வலம் தொடங்கி
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக சென்று முடிவடைந்தது.
ஊர்வலத்துக்கு கல்லூரி முதல்வர் மருத்துவர் ராமலெட்சுமி, துணை
முதல்வர் மருத்துவர் சுரேஷ்பாலன், மருத்துவமனை கண்காணிப்பாளர்
மருத்துவர் கிங்சிலி ஜெபசிங், உறைவிட மருத்துவர் ஜோசப் சென்,
உதவி உறைவிட மருத்துவர்கள் விஜயலெட்சுமி,
ரெனிமோள் ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.
சமூக மருத்துவதுறை மருத்துவர்கள் கோபால், மஞ்சு, கிருஷ்ணபிரசாத், அன்பு
மற்றும் மருத்துவக்கல்லூரி மருத்துவர்கள் சுதா, டெல்பின், யூனிஸ், பிரேமகுமாரி,
பிருந்தா மற்றும் மருத்துவ மாணவர்கள் கலந்து கொண்டனர். கன்னியாகுமரி அரசு
மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்
வைத்து விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மருத்துவக்கல்லூரி முதல்வர்
டீன் ராமலெட்சுமி உடல் பருமன் இன்றயை உலகத்தில் பெரும் தாக்கத்ததை
ஏற்படுத்தி உள்ளது மற்றும் நான்கில் ஒரு பங்கு மக்கள் இந்த நோயால் 2030ஆம்
ஆண்டு பாதிக்கப்படுவதாக தெரியப்படுகிறது. குழந்தைகளும் வளரிளம் பருவத்தினரும்
அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். மேலும் உடல் பருமன் மூலம் பல வகையான
நோய்களுக்கு அதவாது சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், பக்கவாதம், புற்றுநோய்,
மனஅழுத்தம் இது காரணமாக அமைகின்றது. எனவே நல்ல முறையில் உடற்பயிற்சி,
உணவு பழக்க வழக்கங்கள், யோகா இவற்றில் ஈடுபடவேண்டும் என்று கூட்டத்தில்
தெரிவித்தார். மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் கிங்சிலி ஜெபசிங்
வாழ்த்துரை வழங்கினார். பேராசிரியர் சுரேஷ்பாலன் விழிப்புணர்வு
சிறப்புரை ஆற்றினார். நிகழ்ச்சியில் மருத்துவர் கோபால் உரையாற்றினார். உறைவிட
மருத்துவர் ஜோசப் சென் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். மருத்துவர்
கிருஷ்ணபிரசாத் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் பேராசிரியர் முத்துகுமார்
கலந்துகொண்டார். போஸ்டர் பிரசன்டேசன் மற்றும் உலக உடல் பருமன் விழிப்புணர்வு
கையேடுகள, படங்கள் மற்றும் துண்டு பிரசுரங்கள் நோயாளிகளுக்கு வழங்கப்பட்டது.