ஜூன் 3 – உலக மிதிவண்டி தினம்
மலிவு விலையில், சுற்றுச்சூழலுக்கு உகந்த, நிலையான போக்குவரத்துக்கு ஏற்ற மிதிவண்டியின் தனித்துவம், நீண்ட ஆயுள் மற்றும் பல்துறை திறனை அங்கீகரிக்கும் வகையில், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை ஜூன் 3 ஆம் தேதியை சர்வதேச உலக மிதிவண்டி தினமாக அறிவித்தது.
மிதிவண்டி என்பது இன்றைய சூழலில் சாதாரணமான ஒரு வாகனமாக தெரிந்தாலும் அதன் பயன்களோ எண்ணில் அடங்காதவை சொல்லில் கூற முடியாதவை.
பலதரப்பட்ட இருசக்கர வாகனங்கள் நான்கு சக்கர வாகனங்கள் என இந்த சூழலில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகமாகி விட்டாலும் மிதிவண்டியின் தேவையை இன்றளவும் பலர் உணர்ந்தவர்களாகவே இருக்கின்றனர். உதாரணமாக ஒரு குழந்தை பிறந்து நடக்கத் தெரிந்தவுடன் அவர்களின் பெற்றோர்கள் வாங்கி கொடுக்கின்ற முதல் வாகனம் இந்த மிதிவண்டியாகவே இருக்கும் காரணம் இது குழந்தைகளின் உடல்நலத்திற்கு நல்லது என்பதை உணர்ந்த பெற்றோர்கள் இதனை தன் குழந்தைகளுக்கு வாங்கி கொடுக்கும்போது அதன் பயனை அவர்கள் உணர்வார்கள் மேலும் ஆரோக்கியமாகவும் இருப்பார்கள் என்ற ஒரே காரணத்துக்காகவே இந்த மிதிவண்டியை வாங்கி கொடுக்கின்றனர். அதுமட்டுமல்ல இந்த மிதிவண்டி சுற்றுச்சூழலுக்கும் எந்த ஒரு பாதிப்பையும் தராது மேலும் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்தக் கூடியதாக திகழ்கிறது. இதன் முக்கியத்துவத்தை நாம் என்றென்றும் மறக்கக்கூடாது என்ற காரணத்துக்காகவே இந்த உலக மிதிவண்டி தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 3-ம் நாள் கொண்டாடப்படுகிறது. என்னதான் இந்த மிதிவண்டியின் பயனும் அதன் தேவையும் அதிகமாக இருந்தால் கூட படிப்படியாக நவீன வாகன மோகத்தினால் இந்த மிதிவண்டியின் தேவைகள் குறைந்து கொண்டே வருகின்றது. உடற்பயிற்சிக்கு ஏற்றதாகவும் , சுற்றுச்சூழலை பாதுகாக்க கூடியதாக இருக்கின்ற இந்த மிதிவண்டியின் பயனை இந்த நவீன காலத்தில் நம் குழந்தைகளுக்கு நாம் எடுத்துரைக்க வேண்டும் அது அவர்களின் வாழ்க்கையிலும் வருங்கால சந்ததினர் அனைவருக்கும் ஏற்புடையதாக இருக்கும் என்பதை நாம் ஒருபோதும் மறக்கக்கூடாது நம் பிள்ளைகளுக்கு நல்லதோர் சுற்றுச்சூழலை ஏற்படுத்தி அவர்கள் வாழ்வில் நோய் நொடி இல்லாத வாழ்வாக மாற்ற வேண்டும் என்றால் நாமும் இந்த மிதிவண்டியின் பயனை நம் குழந்தைகளுக்கு எடுத்துரைப்போம்.
தொகுப்பு
ஜென்சி