உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுக்குமாறு மக்களை பிரதமர் வலியுறுத்தியுள்ளார்
டிஜிட்டல் ஊடகங்களைப் பயன்படுத்தி உள்ளூர் திறமையாளர்களை ஆதரிப்பதன் மூலம் இந்தியாவின் தொழில்முனைவோர் மற்றும் படைப்பாற்றலை கொண்டாடுமாறு பிரதமர் நரேந்திர மோடி மக்களிடம் வலியுறுத்தினார்.
நமோ செயலியில் பொருட்களுடன் அல்லது அதன் உற்பத்தியாளர்களுடன் மக்கள் செல்பியை பகிர வழிவகுக்கும் இணைப்பையும் அவர் பகிர்ந்துள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:
“இந்தத் தீபாவளிக்கு, இந்தியாவின் தொழில்முனைவோர் மற்றும் அவர்களது படைப்பாற்றலை நமோ செயலியில் உள்ளூர் பொருட்களுக்கு ஆதரவு அளிப்போம் என்பதைக் குறிப்பிடுவோம்.
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்கி, பின்னர் பொருட்கள் அல்லது உற்பத்தியாளருடன் ஒரு செல்பியை நமோ செயலியில் பகிரவும். உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை இதில் பங்கேற்க அழைக்கவும், நேர்மறை உணர்வைப் பரப்பவும், உள்ளூர் திறமைகளை ஆதரிப்பதற்கும், சக இந்தியர்களின் படைப்பாற்றலை ஊக்குவிப்பதற்கும், நமது பாரம்பரியங்களை செழிப்பாக வைத்திருப்பதற்கும் டிஜிட்டல் ஊடகங்களின் சக்தியைப் பயன்படுத்துவோம்”.