என் மண் என் மக்கள் என்ற நடை பயணம் மூலம் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு மாவட்டமாக வந்து கொண்டிருக்கிறார். அதன்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் தன்னுடைய 2 வது நாள் பயணத்தை குளச்சல் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வில்லுக்குறி சந்திப்பில் முடித்து வைக்கும் போது பாஜக தமிழக மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது, குமரி மாவட்டத்தில் 2 வது நாள் நடைபயணத்தை முடித்து வைக்கும் இந்த தருணத்தில் எதற்காக 234 தொகுதிகளிலும் 1400 கிலோமீட்டர் தூரம் நடந்து செல்கிறேன். போராட்ட குணத்தை கொண்டு உள்ளவர்கள் குளச்சல் தொகுதி மக்கள். மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் இந்து சமய மாநாடு நடத்துவதில் திராவிட மாடல் அரசு பணிந்தது. குளச்சல் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பிரின்ஸ் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் முறைகேடு செய்துள்ளதாக தி.மு.க. உறுப்பினர் ஒருத்தர் குற்றச்சாட்டுகிறார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் காங்கிரஸ் தி.மு.க. வை பிரிக்க முடியாது என்று சொல்லுகிறார்கள். இந்தியாவில் அதிக கடன் வாங்கிய மாநிலத்தில் முதலிடத்தில் தமிழகம் உள்ளது. சிவகாமி அம்மாளுக்கு ஓட்டா மேரி அம்மாவுக்கு ஓட்டா என்று கன்னியாகுமரி மாவட்டத்தில் முதல் முதலில் மத அரசியலை உருவாக்கியவர் கருணாநிதி. தி.மு.க. அரசு தொடர்ச்சியாக ஒரு மாவட்டத்தை புறக்கணித்து அவமானப்படுத்தியது என்றால் அது குமரி மாவட்டமாகும். அதனை கருணாநிதி தனது வாயால் கூறிய வார்த்தை “நெல்லை வரை எங்கள் எல்லை குமரி எங்கள் தொல்லை” என்றார். கன்னியாகுமரி மாவட்ட மக்கள் யாரும் பிரிவினை வாதிகள் அல்ல தேசபக்தர்கள். கன்னியாகுமரி மாவட்டத்தை பெருமைபடுத்த எம்பி, எம்எல்ஏ மற்றும் மக்கள் பிரதிநிதிகள் இருக்கிறார்களா.குமரி மாவட்டத்திற்கு ரூ.48 ஆயிரம் கோடிக்கு முன்னாள் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் வளர்ச்சி திட்டங்களை கொண்டு வந்தார். அதில் தற்போது அரசு ரூ.20 ஆயிரம் கோடிக்கு கூட வளர்ச்சி பணிகள் நடத்தப்படவில்லை.
//2021 ம் ஆண்டு அக்டோபர் மாதம் கிராம்புக்கு புவிசார் குறியீடு வழங்கியது மத்திய அரசு, 2023 மார்ச் மாதம் மார்த்தாண்டம் தேனுக்கு புவிசார் குறியீடு வழங்கியது. தற்போது ஆகஸ்ட் மாதம் மட்டி வாழை பழத்துக்கு புவிசார் குறியீடு வழங்கியது என கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கிராம்பு, மார்த்தாண்டம் தேன், மட்டி வாழை பழம் ஆகிய 3 க்கு புவிசார் குறியீடு வழங்கி பெருமை படுத்தி உள்ளது.நீட் தேர்வு வருவதற்கு முன்பு ஒரு மருத்துவ சீட்டை எந்த தகுதியும் இல்லாத நபருக்கு ரூ.1.50 கோடிக்கு விற்று முறைகேடு செய்தவர்கள் தி.மு.க. ஆகும். நீட் ரகசியத்தை யாரும் சொல்ல வேண்டாம் நானே சொல்லுகிறேன். தனியார் மருத்து கல்லூரிக்கு மருத்துவ சீட் விற்று முதலீடு பார்ப்பது தான். 6 முறை திமுக ஆட்சிக்கு வந்துள்ளது. இதில் 5 அரசு மருத்துவக் கல்லூரிகளை தான் கொண்டு வந்துள்ளது. அதைவிட தனியார் மருத்துவ கல்லூரிகள் தான் அதிகம். நீட் என்பது இன்னும் 1000 ஆண்டுகள் ஆனாலும் தமிழகத்தில் இருக்க தான் செய்யும்.
குமரி மாவட்டத்தில் கனிம வளங்கள் அதிக அளவில் கடத்தப்படுகிறது. இதனை தி.மு.க. அரசும், இங்குள்ள அமைச்சர் மனோ தங்கராஜ்சும்.கண்டு கொள்வதில்லை. ஏனென்றால் அந்த கனிம வளம் கொள்ளை கும்பலில் அமைச்சர் மனோ தங்கராஜூம் ஒருவராக ஆகும். தமிழகத்தில் கொள்ளையடித்த கருப்பு பணத்தை வெளிநாட்டிற்கு கொண்டு சென்று அதனை வெள்ளை பணமாக மாற்றவே ஸ்டாலின் வெளிநாடு செல்கிறார். ஒரே குடும்பத்துக்காக உழைக்கக்கூடிய அரசு தி.மு.க. அரசு. விஞ்ஞான கொள்ளையும், ஊழலையுமே இரு கண்களாக தி.மு.க. அரசு கொண்டுள்ளது. திமுக அரசு ஒரு குடும்பத்துக்காக இயங்க கூடிய அரசு. தமிழ்நாடு, பாண்டிச்சேரி ஆகிய இரண்டிலும் சேர்த்து 40 தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெற வேண்டும். அதில் முதல் எம்பி கன்னியாகுமரி தொகுதியில் இருந்து அனுப்பி வைக்க வேண்டும்.
இவ்வாறு பாஜக தமிழக மாநில தலைவர் அண்ணாமலை பேசினார். முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், மாவட்ட பாஜக தலைவர் தர்மராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.