அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் தேசிய மாணவர் அமைப்பு 1949 ல் துவங்கப்பட்டு மாணவர்களிடையே தேசபக்தி,தலைமைபண்பு மற்றும் சேவை மனப்பான்மையை வளர்ப்பதில் 75 ஆண்டுகள் கடந்து உலகின் மிகப்பெரிய மாணவர் அமைப்பாக தொடர்ந்து கல்வி பணியில் சேவை செய்து வருகிறது.
ஏபிவிபி யின் 69 ஆவது தேசிய மாநாடானது புது தில்லியில் டிசம்பர் மாதம் 7 முதல் 10 வரை இந்திரபிரஸ்த நகர் புராரி மைதானத்தில் நடைபெற உள்ளது. பல்வேறு நாடுகள் மற்றும் நமது நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். மாநாட்டின் துவக்க நிகழ்ச்சியானது டிசம்பர் மாதம் 8 ம் தேதி நடைபெற உள்ளது. 9 ம் தேதி ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. 10 ம் தேதி பேரா.யஷ்வந்த்ராவ் கேல்கர் – இளம் சாதனையாளர் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. மாநாட்டில் நாடு முழுவதிலும் இருந்து 12,000 மாணவத் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். தமிழகத்தில் இருந்து 250 மாணவத் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.
2023-24 கல்வி ஆண்டிற்கான ஏபிவிபி யின் தேசிய தலைவராக ராஜ்ஷரண் ஷாகி மற்றும் தேசிய பொதுச் செயலாளராக ஸ்ரீ. யாக்யவல்க்ய சுக்லா தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர்.
சமூக சேவையில் சிறப்பாக செயல்படும் இளைஞர்களை கண்டறிந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் பேரா.யஷ்வந்தராவ் கேல்கர் இளம் சாதனையாளர் விருது வழங்கப்படும். அதன்படி இந்த வருடத்திற்கான விருது சரத் விவேக் சாகர், லாரி பாய் படியா , வைபவ் பண்டாரி ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது.
2023-24 ஆம் ஆண்டிற்கான ஏபிவிபி தென் தமிழக மாநில தலைவராக முனைவர்.சவிதா இராஜேஷ், மாநில செயலாளராக ஶ்ரீ.ஹரிகிருஷ்ண குமார் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர்.