கடலோர ஊர்காவல் படைக்கு தேர்வு

Share others

கன்னியாகுமரி மாவட்ட ஊர்க்காவல் கடலோர பாதுகாப்பு படைக்கு மீனவ இளைஞர்கள் 24 பேர் ஊர்க்காவல் படை வீரர்களாக தேர்வு செய்யப்பட உள்ளனர் எனவும், விண்ணப்பதாரர்கள் இன்று (7.12.2024) கன்னியாகுமரி மாவட்ட ஆயுதப்படை வளாக மைதானத்தில் உரிய சான்றிதழ்களுடன் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி இன்று (7.12.2024) கன்னியாகுமரி மாவட்ட ஆயுதப்படை வளாக மைதானத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் ஆஜராகி இருந்தனர். ஆஜரான விண்ணப்பதாரர்கள் அனைவருக்கும் உயரம், கல்வித்தகுதி, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணல் கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் தலைமயில் நடைபெற்றது.
இந்த தேர்வு கன்னியாகுமரி மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு கூடுதல் கண்காணிப்பாளர் மதியழகன், மாவட்ட குற்றப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் செந்தாமரைக்கண்ணன், ஊர்க்காவல்படை வட்டார தளவாய் பிளேட்வின் ஆகியோர் அடங்கிய தேர்வுக் குழுவினர்கள் முன்னிலையில் நடைபெற்றது.


Share others

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *