கடல் அலையில் சிக்கி சிகிச்சை பெற்று வரும் மாணவிகளை மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் பார்வையிட்டு ஆறுதல்

Share others

கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் லெமூர் கடல்பகுதியில் அலையில் சிக்கி மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் மருத்துவ கல்லூரி மாணவியினை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி தெரிவிக்கையில்-
கேரளம் மற்றும் தென்தமிழக கடலோரப் பகுதிகளில் கடந்த 5.5.2024 அன்று கடலில் எந்தவித அறிகுறிகளும் இன்றி திடீரென பலத்த காற்றும் வீசுவதோடு கடல் கொந்தளிப்பும் ஏற்படகூடும் என்றும், கடலில் 45 முதல் 65 கி.மீ. வேகத்துடன் கூடிய காற்று வீசக்கூடும் என்றும், கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்றும், 1.5 மீட்டருக்கு கடல் அலை எழும்ப கூடும் என்றும் வானிலை ஆய்வு மையத்தால் தெரிவிக்கப்பட்டு உள்ளது. எனவே, மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் செல்லவேண்டாம் என்றும் கரையோரத்தில் திடீரென அதிக அலைகள் ஏற்படும் என்பதால் கடலில் குளிக்க வேண்டாம் என்றும், தாழ்வான கடலோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும், கடல் கொந்தளிப்பால் படகுகள் ஒன்றோடன்று மோதி சேதமடைவதை தடுக்கும் வகையில் போதிய இடைவெளியிட்டு பாதுகாப்பான பகுதிகளில் நிறுத்துமாறும் கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள், பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட அனைவருக்கும் மாவட்ட நிர்வாகத்தால் அறிவுறுத்தப்பட்டதோடு, எச்சரிக்கை விடப்பட்டது.
அதனைத்தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் கடல் சீற்றம் அதிகமாக காணப்பட்டது. இச்சூழலில் இன்று லெமூர் கடற்கரை பகுதியில் கடலில் குளிக்க சென்ற பொழுது ஐந்து தனியார் கல்லூரி மாணவ மாணவியர்கள் கடல் அலையில் சிக்கி மரணம் அடைந்தனர். மூன்று மாணவ மாணவிகள் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் அவர்களை நேரில் பார்வையிட்டு ஆறுதல் கூறப்பட்டது.
மேலும் இது போன்ற நிகழ்வுகள் ஏற்படமால் தடுக்கும் வகையில் மாவட்ட வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, தீயணைப்பு துறை, காவல் துறை, சுற்றுலாத்துறை, மீன்வளத்துறை ஆகிய துறைகளின் மூலம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதோடு அனைத்து துறையினரும் கண்காணிப்பு பணியில் முழுவீச்சுடன் ஈடுபட வேண்டுமென துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
மேலும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அதிகம் செல்லும் கடற்கரை பகுதிகளில் மீன்வளத்துறை, உதவி இயக்குநர்கள் (பேரூராட்சி மற்றும் ஊராட்சி) மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி செயலாளர்கள் உள்ளிட்டோர் எச்சரிக்கை பலகைகள் உடனடியாக வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
கடற்கரை பகுதிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளிடம் அங்கு வசிக்கும் பொதுமக்கள் கடல் அலையின் சீற்றம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர், தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் பிரின்ஸ் பயஸ், கண்காணிப்பாளர் அருள்பிரகாஷ், உண்டு உறைவிட அலுவலர் ஜோசப்சென், உதவி உண்டு உறைவிட அலுவலர் ரெனிமோள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.


Share others

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *