கன்னியாகுமரி மாவட்டம் கண்டன்விளையில் நுள்ளிவிளை ஊராட்சியை பேரூராட்சியாக மாற்றம் செய்வதை கண்டித்து உரிமை மீட்பு மாலை நேர தர்ணா போராட்டம் நுள்ளிவிளை ஊராட்சி தலைவர் பால்ராஜ் தலைமையில் நடந்தது. தக்கலை ஊராட்சி ஒன்றிய கூட்டமைப்பு தலைவர் சிம்சன், மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் நல அமைப்பு தலைவர் அஜித்குமார், செயலாளர் முத்து சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நுள்ளிவிளை ஊராட்சிக்கு உட்பட்ட அனைத்து ஊர்களிலும் உள்ள பொறுப்பாளர்கள், பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் இருதயதாசன், கண்டன்விளை குழந்தை இயேசுவின் புனித தெரேசா ஆலய பங்கு அருட்பணி பேரவை துணைத்தலைவர் ஜெஸ்டஸ், முன்னாள் கல்குறிச்சி ஊராட்சி தலைவர் ரமேஷ், வக்கீல் அருள் தாஸ், விஷ்ணு, குதிரைபந்திவிளை மங்கள அல்போன்ஸ், இந்த தர்ணா போராட்டத்தில் நுள்ளிவிளை ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் மற்றும் மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலய பங்கு அருட்பணி பேரவை துணைத்தலைவர் எட்வின் சேவியர் செல்வன், பொருளாளர் லூக்காஸ், நுள்ளிவிளை தூய கார்மல் அன்னை ஆலய பங்கு அருட்பணி பேரவை துணைத்தலைவர் மெல்பின் ராஜேஷ், முன்னாள் துணைத் தலைவர் ஜோஸ், ஏசு ஆனந்த், கிங் மற்றும் பெண்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.