கண்டன்விளை குழந்தை இயேசுவின் புனித தெரேசா ஆலயம்
நூற்றாண்டு தொடக்க திருவிழா
கன்னியாகுமரி மாவட்டம் கண்டன்விளையில் புகழ் பெற்ற குழந்தை இயேசுவின் புனித தெரேசா ஆலயம் உள்ளது. 1924-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7-ம் தேதி அன்றைய ஆயர் அலோசியஸ் மரிய பென்சிகர் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டு திறக்கப்பட்ட இந்த ஆலயத்தின் 100-வது ஆண்டு தொடக்க திருவிழா செப்டம்பர் மாதம் 29 ம் தேதி தொடங்கி 10 நாட்கள் கோலாகலமாக நடக்கிறது.
தொடக்க நாள் திருவிழாவான 29ம் தேதி காலை 6.30 மணிக்கு முன்னோர் நினைவு சிறப்புத் திருப்பலி, கல்லறை தோட்டம் மந்திரிப்பு, சிற்றுண்டி, காலை 11 மணிக்கு ஜெபமாலை மலை சிற்றாலய குணமளிக்கும் திருப்பலி, மாலை 5 மணிக்கு திருக்கொடி பவனி, 6.30 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை, மாலை 6.45 மணிக்கு குழித்துறை மறை மாவட்டம் தொடர்பாளர் பேரருட்பணி இயேசுரெத்தினம் முன்னிலையில், மார்த்தாண்டம் மறை மாவட்டம் மேதகு ஆயர் டாக்டர் வின்சென்ட் மார்பவுலோஸ் நூற்றாண்டு நினைவு கட்டிடத்தை அர்ச்சித்து திறந்து வைக்கும் நிகழ்வும், தொடர்ந்து திருக்கொடியேற்றம், திருப்பலி, அன்பு விருந்து ஆகியவை நடக்கிறது. 2-ம் நாள் விழாவில் காலை 6.30 மணிக்கு திருமுழுக்குத் திருப்பலி, மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை, திருப்பலி, இரவு 8.30 மணிக்கு பொதுக்கூட்டம் ஆகியவை நடைபெறுகிறது.
குழந்தை தெரேசாவின் பெயர் கொண்ட திருவிழாவான அக்டோபர் 1-ம் தேதி காலை 9 மணிக்கு திருப்பலி, மாலை 6 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை, மாலை 6.45 மணிக்கு மேதகு ஆயர் அத்தனாசியுஸ் இரத்தினசாமி தலைமையில் மலர் சாற்றுதல், நூற்றாண்டு நினைவுச் சின்னம் அர்ச்சிப்பு, தொடர்ந்து திருப்பலி, இரவு 9 மணிக்கு தங்கத்தேர்ப்பவனி, அன்பின் விருந்தும் நடக்கிறது. 4,5,6,7 மற்றும் 8ம் திருவிழா நாட்களில் தினமும் காலை 6.30 மணிக்கு திருப்பலி, மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை, திருப்பலி, இரவு 8.30 மணிக்கு பொதுக்கூட்டம், கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. 8ம் நாள் விழாவில் காலை 11 மணிக்கு ஜெபமாலை மலை சிற்றாலய குணமளிக்கும் திருப்பலி நடைபெறுகிறது.
9-ம் நாள் விழாவான அக்டோபர் 7ம் தேதி காலை 9 மணிக்கு முதல் திருவிருந்து சிறப்புத் திருப்பலி, மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை, தொடர்ந்து தூத்துக்குடி மறைமாவட்ட மேதகு ஆயர் ஸ்டீபன் தலைமை ஏற்று அருளுரை வழங்கும் திருப்பலி, இரவு 9.30 மணிக்கு திருத்தேர் பவனியும், பத்தாம் நாள் விழாவான 8ம் தேதி காலை 5.30 மணிக்கு திருப்பலி, காலை 8 மணிக்கு பெருவிழா சிறப்புத் திருப்பலி, காலை 10 மணிக்கு மலையாள திருப்பலி, 11 மணிக்கு தேர்ப்பவனி, மாலை 6.30 மணிக்கு நற்கருணை ஆசீர், மாலை 7 மணிக்கு திருக்கொடியிறக்கம் தொடர்ந்து பொதுக்கூட்டம், கலை நிகழ்ச்சிகள் ஆகியவை நடைபெறுகிறது.
நூற்றாண்டு தொடக்க திருவிழா ஏற்பாடுகளை பங்குப் பணியாளரும் காரங்காடு வட்டார முதல்வருமான அருட்பணி சகாய ஜஸ்டஸ், இணைப் பணியாளர்கள் அருட்பணி ஏசுதாசன், அருட்பணி ராபின்சன், பங்கு அருட்பணி பேரவை துணைத் தலைவர் ஜெஸ்டஸ், செயலாளர் ஐசக், பொருளாளர் வறுவேலாள், துணைச் செயலாளர் லில்லி மலர் மற்றும் பங்கு இறைமக்கள், அருட்பணிப் பேரவையினர் ஆகியோர் இணைந்து சிறப்பாக செய்து வருகின்றனர்.