கண்டன்விளை குழந்தை இயேசுவின் புனித தெரேசா ஆலய 102 வது ஆண்டு திருவிழா பங்குத்தந்தை அருள்பணி பெஞ்சமின் போஸ்கோ அனைவரையும் அழைக்கிறார்

Share others

கண்டன்விளை குழந்தை இயேசுவின் புனித தெரேசா ஆலய 102வது ஆண்டு திருவிழா செப்டம்பர் 26 ஆம் தேதி தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது. முதல் நாள் விழாவான 26ம் தேதி காலை 6.30 மணிக்கு முன்னோர் நினைவு திருப்பலி, காலை 7.30 மணிக்கு கல்லறை தோட்டம் மந்திரிப்பு, மாலை 5 மணிக்கு திருக்கொடி பவனி, 6 மணிக்கு திருச்செபமாலை, புகழ்மாலை, தொடர்ந்து 7 மணிக்கு மார்த்தாண்டம் இயேசுவை காண்போம் அமைப்பின் இயக்குனர் அருட்பணி ரபேல் தலைமையில் திருக்கொடியேற்றம், மாத்திரவிளை பங்குத்தந்தை அருட்பணி கலிஸ்டஸ் அருளுரையில் திருப்பலி, அன்பு விருந்து ஆகியவை நடக்கிறது.

2ம் நாள் விழாவில் காலை 6:30 மணிக்கு திருமுழுக்குத் திருப்பலி, மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை, திருப்பலி நடக்கிறது. விழா நாட்களில் தினமும் காலை, மாலை திருப்பலி, இரவு பொதுக்கூட்டம், கலை நிகழ்ச்சிகள் ஆகியவை நடக்கிறது. 6ம் நாள் திருவிழாவான அக்டோபர் 1 ஆம் தேதி மாலை 7 மணிக்கு திருப்பலி, இரவு 9 மணிக்கு தங்க தேர்ப்பவனியும் தொடர்ந்து அன்பு விருந்து ஆகியவை நடக்கிறது. 8ம் நாள் திருவிழாவில் காலை 9 மணிக்கு முதல் திருவிருந்து பெறும் சிறார்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களுக்கு தியானம், காலை 11 மணிக்கு ஜெபமாலை மலை சிற்றாலய குணமளிக்கும் திருப்பலி ஆகியவை நடக்கிறது.

9 ஆம் திருவிழாவான 4ம் தேதி காலை 8 மணிக்கு முதல் திருவிருந்து சிறப்பு திருப்பலி, மாலை 7 மணிக்கு அப்பட்டுவிளை புனித சூசையப்பர் ஆலய பங்குத்தந்தை அருள்பணி சேவியர் புரூஸ் தலைமையில், அப்பட்டுவிளை புனித அந்தோணியார் ஆலய பங்குத்தந்தை அருட்பணி ததேயுஸ் அருளுரையில் திருப்பலி, இரவு 9 மணிக்கு தேர்ப்பவனி ஆகியவை நடக்கிறது. 10 ஆம் நாள் திருவிழாவில் காலை 5.30 மணிக்கு செட்டிச்சார்விளை பங்குத்தந்தை அருட்பணி பிருதிவி தாமஸ் தலைமையில், முட்டம் கேஎம்எம்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருட்பணி சகாய ஜாண்பிரிட்டோ அருளுரையில் முதல் திருப்பலி, 8 மணிக்கு பெருவிழா சிறப்பு திருப்பலி, காலை 10 மணிக்கு தூத்தூர் அருட்பணி சில்வெஸ்டர் குரிஸ் தலைமைில் மலையாள திருப்பலி, காலை 11 மணிக்கு தேர்பவனி, மாலை 6.30 மணிக்கு நற்கருணை ஆசீர், 7 மணிக்கு திருக்கொடியிறக்கம், இரவு 7.30 மணிக்கு பொதுக்கூட்டம், கலை நிகழ்ச்சிகள் ஆகியவை நடக்கிறது.

திருவிழா முன்னேற்பாடாக 23, 24, 25 ஆகிய தேதிகளில் 3 நாட்கள் மாலை 6 மணி முதல் 9 மணி வரை தினமும் நற்செய்தி கொண்டாட்டமும், தொடர்ந்து திருப்பலியும் நடக்கிறது. திருவிழா ஏற்பாடுகளை கண்டன்விளை ஆலய பங்குத்தந்தை அருட்பணி பெஞ்சமின் போஸ்கோ, இணை பங்குத்தந்தை அருட்பணி அருள் வினீஷ், பங்கு அருட்பணி பேரவை துணைத் தலைவர் ஜெஸ்டஸ், செயலாளர் ஐசக், பொருளாளர் வறுவேலாள், துணைச் செயலாளர் ஜாக்கீர் சுபிஸ் மற்றும் பங்கு இறைமக்கள், பங்கு அருள்பணி பேரவையினர், எஸ்டிஎஸ் அருள் சகோதரிகள் ஆகியோர் இணைந்து செய்து வருகின்றனர்.


Share others

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *