கண்டன்விளை குழந்தை இயேசுவின் புனித தெரேசா ஆலய பங்கு அருட்பணிபேரவை நிர்வாகிகள் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம் கண்டன்விளை குழந்தை இயேசுவின் புனித தெரேசா ஆலய பங்கு அருட்பணி பேரவை நிர்வாகிகள் தேர்வு கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்தது. இதில் துணைத் தலைவராக ஜெஸ்டஸ், செயலாளராக ஐசக், பொருளாளராக வறுவேலாள், துணைச் செயலாளராக ஜாக்கீர் சுபீஷ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இதை அடுத்து புதிய நிர்வாகிகள் பங்குத்தந்தை அருட்பணி மரிய வின்சென்ட் முன்னிலையில் பொறுப்பேற்றுக் கொண்டனர். புதிய நிர்வாகிகளுக்கு பங்கு இறைமக்கள் வாழ்த்து தெரிவித்தனர்.