மல்லிப்பட்டினம் பட்டதாரி ஆசிரியர் படுகொலையை கண்டித்து
தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோ ஜாக் )
கன்னியாகுமரி மாவட்ட அமைப்பு சார்பில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் செந்தில் குமார், சுரேஷ் குமார், ஜாண் கிறிஸ்டோபர், சுமஹாசன் ஆகியோர் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தை டிட்டோ ஜாக் மாநில உயர்மட்ட குழு உறுப்பினர் தியாகராஜன் துவக்கி வைத்தார். முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்க மாவட்ட தலைவர் பென்னட் ஜோஸ் போராட்டத்தை முடித்து வைத்தார்