கண்ணனூர் ஊராட்சி பொதுமக்களுக்கு ஒர் அறிவிப்பு
கண்ணனூர் ஊராட்சியில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பித்ததில் சுமார் 70-விழுக்காடு மக்களுக்கு கிடைத்துள்ளது மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும். மீதமுள்ள தகுதியான மக்களுக்கு மீண்டும் விண்ணப்பிக்க தமிழ்நாடு அரசு வாய்ப்பு வழங்கி உள்ளது. அதற்கான சிறப்பு ஏற்பாடுகள் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் செயல்படும் இ. சேவை மையத்தில் செய்யப்பட்டு உள்ளது. அதன்படி
21 -9-2023 – வியாழன்
| -வது,2-வது -வார்டு,
22-9-2023 – வெள்ளி 3-வது,4-வது-வார்டு,
23-9-2023- சனி 5-வது, 6-வது வார்டு, 25-9-2023- திங்கள் 7-வது -8-வதுவார்டு, 26-9-23- செவ்வாய்9-வது10-வதுவார்டு,
27-9-2023 – புதன் 11-வது -12-வது வார்டு
ஆகிய தேதிகளில் ஊராட்சி மன்ற அலுவலகம் சென்று நமது விண்ணப்பம் ஏன் நிராகரிக்கப்பட்டது என்பதை தெரிந்துகொள்ளவும், மீண்டும் விண்ணப்பித்து உரிமை தொகையை பெற்றுக்கொள்ளவும் என்று கண்ணனூர் ஊராட்சி தலைவர்
ரெஜினி விஜிலாபாய் தெரிவித்துள்ளார்.
ஆதார் அட்டை,
வங்கி – புத்தகம்,
குடும்ப அட்டை,
மின் – அட்டை,
வறுமை- கோடு – சான்று – ஆகிய அசல் சான்றுகள் கொண்டு வர வேண்டும்.